Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு ஓட்டு போட்டும்? ஸ்டாலினுக்கு போன வீடியோ! பட்டா மாறுதலில் அசிங்கப்பட்ட குன்றத்தூர் வி.ஏ.ஓ

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: குன்றத்தூர் விஏஓ சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை வருவாய்த்துறையில் ஏற்படுத்தியிருக்கிறது.. என்ன நடந்தது?

வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு பல்வேறு வசதிகளை தமிழக பத்திரப்பதிவு துறை செய்து தந்துவருகிறது.. ஆனாலும் ஆங்காங்கே போலி பத்திரங்கள் நடமாட்டமும், பத்திர மோசடிகளும், பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெறுவதும் அதிகரித்தபடியே வருகிறது..

Did CM MK Stalin take action against Kundrathur V A O Land Patta Change video and Kancheepuram Deed Document

முறைகேடுகள்: இந்த முறைகேடுகளை களைவதற்கான முயற்சியில் பதிவுத்துறைவும் ஓயாமல் ஈடுபட்டு வருகிறது. முன்பிருந்ததைவிட, இந்த முறைகேடுகள் தற்போது ஓரளவு குறைந்து காணப்படுவதை மறுக்க முடியாது.

அதேசமயம், போலிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறையவில்லை.. போலி பட்டாக்களில் ஈடுபடுபவர்கள், பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. தாசில்தார், விஏஓ, என யாராக இருந்தாலும், அவர்களின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் ஒருசில அதிகாரிகளின் லஞ்ச அட்டகாசம் அடங்கவில்லை. இதோ காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது..

பட்டா மாறுதல்: செல்வகாந்தன் என்ற நபர், தனக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்பதற்காக பரணிப்புத்தூர் விஏஓ கிரண்ராஜை அணுகியிருக்கிறார்.. அதற்கு செல்வகாந்தனிடம் பட்டா மாறுதல் செய்வதற்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டாராம்.. வழக்கமாக, அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை தர மறுப்பவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தருவார்கள்.

ஆனால், செல்வகாந்தன் அப்படி செய்யவில்லை.. விஏஓ கிரண்ராஜ் லஞ்சம் கேட்கும்போது, அவருக்கே தெரியாமல் அதனை ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார் செல்வகாந்தன். இந்த வீடியோதான், அரசுத்துறையில் பற்றிக்கொண்டு எரிய துவங்கியது.. அத்துடன், திமுக அரசை இழுத்து கொண்டுவந்து, செல்வகாந்தன் அந்த வீடியோவில் பேசியிருந்ததும், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வீடியோ: அந்த வீடியோவில், "நான் திமுகவுக்கு ஓட்டு போட்டேன்.. ஆனால் இந்த தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது... ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழைகூட வாங்க முடிவதில்லை.. இந்த சான்றிதழுக்கு 500, 1,000 ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் பெற முடியவில்லை.

வருவாய் துறையினர் லஞ்சம் இல்லாமல் பணியாற்றுவதில்லை... பட்டா மாற்றம் செய்ய 10,000 ரூபாய் கேட்கிறார்கள்.. அப்படியானால் சாமானியர்களின் வாழ்க்கை என்னாகும்? என்று செல்வகாந்தன் கேள்வி எழுப்பியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்: "பணிகளை முடிக்காமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகள், நேரில் அழைத்து லஞ்சம் பெற்றனர்" என்ற தலைப்பில் இந்த வீடியோ வைரலாகி, வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியில், இந்த வீடியோ, முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கும் சென்றது.. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர், உரிய விசாரணையை துரிதமாக மேற்கொண்டனர்..

இதில், செல்வகாந்தன் வீடியோவில் தந்திருந்த தகவல்கள் அனைத்தும் உண்மையா? என்று விசாரிக்கப்பட்டது.. அனைத்து தகவல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது... அது தொடர்பான ஆவணம், செல்வகாந்தன் செல்போனிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

பரபரப்பு: அதுமட்டுமல்லாமல், பட்டா மாற்றம் லஞ்சம் வாங்கிய, பரணிபுத்துார் கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜை, அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. செல்வநாதன் போட்ட ஒரே ஒரு வீடியோவால், ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் பரபரத்துவிட்டது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+