நெஞ்சே பதறுதே.. "டாக்டர் மட்டும் தொடலாமா".. பாறாங்கல்லில் இப்படியா.. ஐயோ விலா எலும்பு.. கதறிய காஞ்சி
காஞ்சிபுரம்: இரக்கமற்ற மனிதர் ஒருவரால், உலமறியா பச்சிளம் குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளது.. காஞ்சிபுரம் போலீசார் சம்பந்தப்பட்டவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெரும்பாலான கள்ளக்காதல் கொலைகளில், பலியாவது பச்சிளம் குழந்தைதான்.. பெற்ற தாயே, தன் குழந்தையை ஈவிரக்கமில்லாமல் கொல்லும் கொடூரங்கள் நடப்பது அதிகமாகிவிட்டது.
இதுஒருபுறம் என்றால், மனைவி மீதுள்ள கோபத்தில், ஒன்றுமறியாத குழந்தைகளை, மனசாட்சியேயில்லாமல் கொல்லும் அப்பாக்களின் கொடுமையும் அதிகமாகி கொண்டிருக்கிறது..

முனிராஜா
சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்தது.. அவர் பெயர் முனிராஜா.. 22 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி... மனைவி பெயர் சுவாதி.. 19 வயதாகிறது..இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது... ஆனால், சுவாதியின் நடத்தையில் முனிராஜாவுக்கு அடிக்கடி சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. சுவாதியிடம் தினமும் தகராறு செய்து கொண்டே வந்தார்.. ஒருநாள் நிக்கிலுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. குழந்தையை டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்று சுவாதி, 4 நாட்களாக கெஞ்சியும், முனிராஜா அழைத்து செல்லவில்லை.. சம்பவத்தன்று இரவு, குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகிவிட்டதால், சுவாதி பதறிப்போய் அழுதார்.

பாறையில் ஓங்கி
குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லாததால்தான் உடல்நிலை இப்படி மோசமாகிவிட்டது என்று சுவாதி அழுதுகொண்டே முனிராஜிடம் சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், "இந்த குழந்தை உயிருடன் இருந்தால்தானே, ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போக சொல்கிறாய்?" என்று சொல்லி, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து, அங்கிருந்த ஒரு பாறையில் குழந்தையின் காலை பிடித்து ஓங்கி ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி, அங்கேயே இறந்துவிட்டது.. இதை பார்த்ததுமே சுவாதி, அங்கேயே மயக்கம் போட்டு கீழேவிழ, முனிராஜ், அங்கிருந்து எகிறி தப்பினார்.

கூல் பதில்
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே நம்ம நாங்குநேரியிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.. 2 வயது ஆண் குழந்தையை தன் கணவரிடம் தந்துவிட்டு, குளிக்க சென்றார் அந்த இளம்தாய்.. திரும்பி வந்து பார்த்தபோது, அழுதுகொண்டே இருந்தது.. எதனால் குழந்தை அழுகிறான் என்று கணவரிடம் கேட்டதற்கு, எறும்பு பொடியை பாலில் கலந்து கொடுத்து விட்டேன் என்று கூலாக கூறியுள்ளார்.. உடனே குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனை ஓடவும், தீவிர சிகிச்சை குழந்தைக்கு நடந்தது.. இந்த கொடூரம் எதற்காக தெரியுமா?

குடியிருப்பு
தன்னுடைய வயதான அம்மாவுக்கு, மனைவி உதவி, ஒத்தாசைகள் செய்தாராம்.. இது மகனுக்கு பிடிக்கவில்லை.. என் அம்மாவுக்கு ஏன் உதவி செய்றே? என்று தகராறு மனைவியிடம் தகராறு செய்துவந்த நிலையில், அந்த கோபத்தில் குழந்தையை இப்படி செய்துவிட்டாராம். இதோ இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கவுசல்யா... காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.. இவர்கள் 2 பேருமே பல வருடங்களாக காதலித்து வந்தனர்.. ஆனால், திருமணம் செய்யவில்லை.. அதேசமயம், நெருங்கியும் பழகி வந்திருக்கிறார்கள்.. இதனால் கவுசல்யா கர்ப்பமானார்...

தொடலாமா
இதற்கு பிறகுதான் 2 பேரும், கடந்த 5 மாதத்திற்கு முன்பு, கல்யாணம் செய்து கொண்டனர்... கடந்த 2 மாதத்திற்கு முன்பு, கவுசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. அதனால், ரஞ்சித்குமார், கவுசல்யாவையும், குழந்தையையும் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.. அப்போது, மனைவி கவுசல்யாவிடம், ரஞ்சித்குமார் நலம் விசாரித்தபோது, கவுசல்யாவின் உடலின் மீது கைவைத்துள்ளார். இதனால், கவுசல்யா வலி அதிகமாக இருக்கிறது என்று சொல்லவும், ரஞ்சித்குமாருக்கு கோபம் வந்துவிட்டது.. அப்படின்னா, டாக்டர் மட்டும் உன் உடம்பை தொடலாமா? டாக்டர் தொடும்போது மட்டும் வலி ஏற்படவில்லையா? என்று கேட்டு அங்கேயே தகராறு செய்துள்ளார்..

பச்சிளம் சிசு
வாக்குவாதம் வெடிக்கவும், மருத்துவமனையில் இருந்து கவுசல்யாவின் பெற்றோர், கவுசல்யாவையும், கை குழந்தையையும் செம்மஞ்சேரியில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். இதனால், ரஞ்சித்குமார், கவுசல்யா வீட்டுக்கே வந்துவிட்டார்.. உடனடியாக கவுசல்யாவை தன்னுடன் புறப்பட சொன்னார். மருத்துவமனையில் இருந்து இப்போதுதான் வந்துள்ளதாகவும், பச்சிளம் குழந்தை எடுத்துக் கொண்டு, உடனே எப்படி வரமுடியும்? அம்மா வீட்டில் சில நாட்கள் இருப்பதாகவும் சொல்லி உள்ளார்.. இதனால் ஆவேசமடைந்த ரஞ்சித்குமார், கவுசல்யாவை சரமாரியாக அடித்து தாக்கினார்..

விலா எலும்பு
இதில், கவுசல்யாவுக்கு, தலை, முகம், காலில் பலத்த காயமடைந்து, ரத்தம் கொட்டியது.. இதனால் கண்ணீர் வடித்த பெற்றோர், மகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சைக்காக சென்றனர். அந்த நேரத்தில் 2 மாத குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது.. அந்த குழந்தையை பார்த்ததுமே ரஞ்சித்குமாருக்கு கோபம் வந்துவிட்டது.. கவுசல்யா மீதுள்ள கோபத்தில், கைக்குழந்தையின் காலை பிடித்து சுவரில் ஓங்கி அடித்தார்.. இதில், குழந்தையின் விலா எலும்பு நொறுங்கியது... பிறகு, பின்மண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டு, குழந்தை அப்போதே இறந்துவிட்டது..

புழுங்கும் மனம்
இந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து, ரஞ்சித்குமாரை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல், அவைகளை சரியாக கையாளவும் முடியாமல், உலகமறியா பச்சிளம் குழந்தைகள் துடிதுடித்து இறந்துவருவதை ஜீரணிக்கவே முடியவில்லை.. பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ பேர், மனம்புழுங்கி தினம் தினம் கலங்கி கிடக்கும் நிலையில், இதுபோன்ற "மனிதம் செத்த மனிதர்களை" என்ன செய்வது??
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications