காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அய்யா எங்கள காப்பாத்துங்க! அமைச்சர் தா.மோ.அன்பரசன் காலில் விழுந்த கவுன்சிலர்! என்னாச்சு தெரியுமா?

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது.

இதற்கு தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞர் அணியினர் கலந்துக்கொண்டனர்

செந்தில் பாலாஜியை ரவுண்டு கட்டிய பாஜக.. 'நோட்டா’ - சளைக்காமல் அமைச்சர் கொடுத்த கவுன்ட்டர் அட்டாக்! செந்தில் பாலாஜியை ரவுண்டு கட்டிய பாஜக.. 'நோட்டா’ - சளைக்காமல் அமைச்சர் கொடுத்த கவுன்ட்டர் அட்டாக்!

அமைச்சர் தாமோ.அன்பரசன்

அமைச்சர் தாமோ.அன்பரசன்

அமைச்சர் தாமோ.அன்பரசன் நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கி வந்த போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 11 வது திமுக கவுன்சிலர் வீரபத்திரனின் மனைவி தாய் சகோதரி மற்றும் வீரபத்திரன் குழந்தைகள் ஆகியோர் அமைச்சர் காலில் திடீரென விழுந்து கண்னீர் மல்க கோரிக்கை ஒன்றை வைத்தனர்.

காலில் விழுந்த கவுன்சிலர்

காலில் விழுந்த கவுன்சிலர்

அப்போது அமைச்சரிடம், கடந்த ஏப்ரல் மாதம் கவுன்சிலர் வீரபத்திரன் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது இதில் முக்கிய குற்றவாளி மதன்ராஜை ஸ்ரீபெரும்புதூர் போலிசார் கைது செய்யவில்லை என்றும் மேலும் மதன்ராஜின் மனைவி காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அவரின் தூண்டுதல் பேரில் எங்களது குடும்பத்தினர் மீது ஸ்ரீபெரும்புதூர் போலிசார் பொய் வழக்குகள் பதிவு செய்வதாகவும் கவுன்சிலர் வீரபத்திரன் தெரிவித்தார்

பொய் வழக்கு

பொய் வழக்கு

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசுவதாகவும் மேற்படி எந்த புகாரும் உங்கள் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்படாது எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கவுன்சிலர் வீரபத்திரனிடம் தெரிவித்தார். திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அமைச்சர் காலில் விழுந்த சம்பவம் அக்கட்சியினரிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 உண்மை என்ன?

உண்மை என்ன?

இதனிடையே இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அமைச்சரின் காலில் கவுன்சிலர் விழுந்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் சிலர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதற்கான உண்மையான காரணம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Kanchipuram District Sriperumbudur Municipality DMK councillor Prabhakaran's family fell on the feet of minister Tha mo Anbarasan and a discussion has arisen on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X