இ-பாஸ் தமிழ்நாட்டில் ரத்தாகிறதா...சென்னைக்கு இ பாஸ் தேவையா...அன் லாக் 4.0 எப்போது?
சென்னை: தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு இ பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பின்னரே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியும், அதுவும் திருமணம், மருத்துவ எமர்ஜென்சி, இறப்பு போன்ற காரணங்களைக் காட்டிதான் செல்ல முடியும்.
இந்த முறையில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து, இ பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

ஆனால், மத்திய அரசின் அன் லாக் 3.0 ல் மாநிலங்களுக்கு இடையில் மக்கள் பயணம் மேற்கொள்ளவும், சரக்குப் போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு இந்த நடைமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. தமிழ்நாட்டில் இ பாஸ் நடைமுறையால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பணிக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மத்திய அரசு தனது உத்தரவில், ''போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. அன்லாக் 3.0ல் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருந்தது. அதை அப்படியே பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி அரசு இ பாஸ் முறையை ரத்து செய்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டிலும் இ பாஸ் முறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29ஆம் தேதி அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இதுபோன்ற ஆலோசனை மேற்கொண்ட பின்னர்தான் முதல்வர் முடிவை அறிவிப்பார். அதேபோன்று இந்த முறையும் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இறுதிவரை முன்பு அறிவிக்கப்பட்ட விதிமுறைகள்தான் தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அன் லாக் 4.0ல் தான் மாற்றங்கள் இருக்கும். செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து அன் லாக் 4.0 புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகமும் அறிவிக்கலாம். அப்போது, இ பாஸ் முறையும் தமிழ்நாட்டில் மொத்தமாக ரத்து செய்யபடுகிறதா என்பதும் தெரிய வரும். ஏற்கனவே மத்திய அரசு ரத்து செய்து இருந்தாலும், இந்த் விஷயத்தில் தமிழ்நாடு தான் முடிவு எடுக்க வேண்டும். சென்னைக்கும் தற்போது இ பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. மாற்றங்கள் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications