Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களை நிர்வாணப்படுத்தி நாசம் செய்த டுபாக்கூர் சாமியார் ஸ்ரீதர்.. போலீஸ் வலை

பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜோசியம் பார்க்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார்- வீடியோ

    செய்யூர்: எந்த பெண்கள் தம்மிடம் குறை என்று வந்தாலும் அவர்களிடம் நைசாக பேசி நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தி அவர்களை நாசம் செய்வதுதான் இந்த டுபாக்கூர் சாமியாரின் வேலையே!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிற ஓதியூர் கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த சாமியார். இவர் பெயர் ஸ்ரீதர். வயது 40. ஆனால் வீட்டில் எவ்வளவு வற்புறுத்தியும் கல்யாணமே செய்து கொள்ளவில்லை.

    தான் ஒரு சாமியார் என்று சொல்லி ஜோசியம் பார்க்க துவங்கி உள்ளார். இதை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் குறி சொல்ல ஆரம்பித்துள்ளார். அதனால் ரொம்ப சீக்கிரம் ஃபேமஸ் ஆனவர். இதில் சக்சஸ் ஆகிவிடவும் ஜோசியத்துக்கு அடுத்ததாக மாந்திரீகத்தை கையில் எடுத்து கொண்டார்.

    [எல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி!]

    சரி பண்ணனும்

    சரி பண்ணனும்

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவர் ஸ்ரீதரிடம் ஜோசியம் பார்க்க வந்தார். மல்லிகாவுக்கு வயது 34. என்ன பிரச்சனை என்று ஸ்ரீதர் மல்லிகாவை கேட்டார். அதற்கு மல்லிகா, தன் உடம்பில் எப்பவும் ஏதாவது தொந்தரவு இருந்துட்டே இருக்கு, எதனால இப்படின்னு தெரியல, நீங்கதான் இதை சரி பண்ணனும்" என்றார்.

    நிர்வாண பூஜை

    நிர்வாண பூஜை

    உடனே ஸ்ரீதர், இப்படிப்பட்ட பிரச்சனைக்கு எல்லாம் ஜோசியத்தைவிட மாந்தீரிகம்தான் சரியானது. அதனால நான் சொல்லும் நாளில் என்னை வந்து பாரும்மா" என்று சொல்லி நாளையும் குறித்து கொடுத்தார். அதன்படியே மல்லிகாவும் குறித்த அந்த நாளில் சென்றார். உடனே ஸ்ரீதர் மாந்திரீகம் செய்ய வேண்டும் என்றால், நிர்வாணமாக இருக்க வேண்டுமே என்று சொல்லி, மல்லிகாவை பலாத்காரமே செய்து விட்டார்.

    புகார் மேல் புகார்

    புகார் மேல் புகார்

    இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த மல்லிகா, கதறி கொண்டே தன் குடும்பத்தினரிடம் சொல்ல, ஆத்திரமடைந்த அவர்கள் சாமியார் மீது செய்யூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளிக்க சென்றனர். அப்போதுதான் மற்றொரு விவரம் தெரியவந்தது, ஸ்டேஷனில் ஏற்கனவே சுமதி என்ற பெண்ணும் ஸ்ரீதர் பற்றி புகார் அளித்துள்ளார் என்பது.

    விசாரணை துவக்கம்

    விசாரணை துவக்கம்

    இப்படி இரு பெண்கள் என்றில்லை, எந்த பெண்கள் உடல்ரீதியான தொந்தரவு என்று ஸ்ரீதர் கிட்ட போனாலும் மாந்திரீகம் என்ற பெயரில் நாள் குறித்து கொடுப்பாராம் ஸ்ரீதர். பிறகு நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று கூறி பலாத்காரத்தில் இறங்குவாராம். இதுதான் இவரது ஸ்டைலே!! ஒரே சாமியார்கிட்ட இருந்து 2 புகார்கள் அடுத்தடுத்து வரவும் போலீசார் இதனை உடனடியாக பதிவு செய்தனர். ஆனால் ஸ்ரீதர் தொடர்ந்து தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீதரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+