காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் 5ஆவது மாடியில் நின்று அழுத மாணவி! ஒரு நொடியில் குதித்து தற்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 5ஆவது மாடியில் இருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் கல்லூரி விடுதிகளிலேயே தங்கியுள்ளனர்.

விடுமுறை நாளான நேற்று இரவு விடுதியின் 5ஆவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் அழுதுக் கொண்டே நின்றுள்ளார். அவர் கீழே குதிப்பதற்காக நின்றிருந்தது தெரியவந்தது. இதை பார்த்த சிலர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் அந்த மாணவி கீழே குதித்துவிட்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி. அவர் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த சம்பவம் குறித்த போலீஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. 5ஆவது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications