"356".. அப்ப நாகர்கோவிலில் பயத்தில் உளறியது யார்.. வள்ளுவர் கோட்டத்தில் நறுக்குனு கேட்ட கரு. நாகராஜ்
கரு நாகராஜன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவை விமர்சித்துள்ளார்
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுகவை சரமாரி விமர்சித்துள்ளனர் பாஜகவினர்.. இந்த பேச்சுக்கள் சோஷியல் மீடியாவிலும் ஷேர் ஆகி வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனம் எழுந்ததுடன், அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிறுபிள்ளைத்தனம்
அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது... எந்த ஒரு பாஜக தொண்டனும் வழக்குக்கும், சிறைக்கும் அஞ்சுவதில்லை. நியாயத்திற்காக போராடினால் பொய் வழக்கா? என்ற கேள்வியுடன் திறனற்ற திமுக ஆட்சியின் அராஜகப் போக்கை எதிர்க்கிறோம் என்று விமர்சித்து, இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக பாஜக அறிவித்தது. அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

நாராயணா நாராயணா
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், திருப்பதி நாராயணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்... அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள போலீசாரை கண்டித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.. ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்... ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகக்கு மட்டும்தான் உள்ளது என்றும் குஷ்பு பெருமிதமாக கூறினார்.

உளறல் உளறல்
இதற்கு பிறகு, துணைத்தலைவர் கரு.நாகராஜன் பேசும்போது, அண்ணாமலை போன்ற இமாலய தலைவர் மீது வழக்கு போட்டால் மிரண்டு போய், அறையில் உட்கார்ந்துவிடுவார் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் அது பெரிய தவறு... 153, 501 ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டது நீங்கள்தான்.. ஆனால் நாகர்கோவிலில் போய் பயந்து உளறியது யார்? முதல்வர் ஸ்டாலின்... வழக்கு போட்ட 2வது நாளே நாகர்கோவிலுக்கு சென்று பேசியது என்ன தெரியுமா? அனைத்தையும் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

153, 501
"ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள்" என்கிறார்.. யார் ஆட்சியை கலைக்க பார்த்தது? நமது தலைவர்கள் யாராவது அப்படி சொன்னார்களா? திமுக ஆட்சியை 2 முறை ஆட்சியில் இருந்து துரத்திய காங்கிரசோடு கூட்டு சேர்ந்துகொண்டு ஆட்சிக் கலைப்பு பற்றி இன்று இவர் பேசுகிறார். எங்கள் தலைவர் மீது 153, 501 ஆகிய பிரிவுகளில் வழக்கு போட்டுவிட்டு, 356ஐ கண்டு பயந்துபோய் நாகர்கோவிலில் பேசுகிறீர்கள்.. இது வெட்கக்கேடான விஷயம். எதையாவது இப்படியே சொல்லி மக்களை குழப்பவேண்டும், மக்களை தூண்டி விட வேண்டும், மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்காயவேண்டும்.. இதுதான் திமுகவின் கொள்கை" என்றார் பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜன்












Click it and Unblock the Notifications