காஞ்சிபுரத்தில் பிரியாணி கடையில் பூத்த கள்ளக்காதல்! கறி வாங்கி வந்த கணவர் கேமராவை பார்த்தால்? ஓ காட்
சென்னை: கள்ளக்காதல் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதுடன், குடும்ப உறவுகளும் உடைந்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வதும், மனைவியை கணவன் கொல்வதும் என அட்டகாசங்கள் அதிகரித்துவிட்டன.. இதனால் இவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் துயரமும் நடந்து வருகிறது.. வடமாநிலங்கள் போலவே தமிழகத்திலும், கள்ளக்காதல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை தந்து வருகிறது.. இதோ காஞ்சிபுரத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது மேவலூர் குப்பம்.. இங்கு வசித்து வரும் தம்பதி அரிகிருஷ்ணன் - பவானி.. பிரியாணி கடை வைத்திருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.. 39 வயதாகும் பவானி, பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

பிரியாணி ஆட்டுக்கறி
ஹரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு ஆட்டுக்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க அடிக்கடி வெளியே செல்ல வேண்டி வரும் என்பதால், பவானியை கடையில் விட்டு செல்வது வழக்கமாகும்.. அப்போதுதான் அதே கடையில் வேலை பார்த்த மதன்குமார் என்ற 29 வயது இளைஞருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது தகாத உறவாக மாறி, இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த கள்ளக்காதல் ஹரிகிருஷ்ணனுக்கு தெரியவந்துள்ளது.. இதனால், அந்த கள்ளக்காதல் ஜோடிக்கு தெரியாமல் கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வைத்து, கண்காணித்தார். அப்போதுதான், பவானியும், மதன் குமாரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் ஹரிகிருஷ்ணன்..
கள்ளக்காதல் ஜோடி
உடனே மதன்குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டார். பிறகு பவானியையும் கடுமையாக கண்டித்தார்..
இதனால் கள்ளக்காதல் ஜோடி ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் திணறியது.. அப்போதுதான் கணவரை கொன்றுவிடுவது என்று பவானி முடிவுக்கு வந்தார்.. இதுகுறித்து மதன்குமாரிடம் பேசினார். இறுதியில், கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலிப்படையினரை அணுகி ரூ.15 லட்சம் பேரம் பேசி, 2 லட்சம் அட்வான்ஸ் தந்தனர்.
பேரம் பேசிய நபர்கள்
சம்பவத்தன்று, மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றது.. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்..
உடனே கூலி படையினர் ஹரிகிருஷ்ணனுக்கு போன்செய்து, "உன்னை கொல்வதற்கு உன் மனைவி ரூ.15 லட்சம் பேரம் பேசி ரூ.2 லட்சம் தந்திருக்கிறார்.. நீ எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்றனர்..
அரண்ட ஹரிகிருஷ்ணன்
இதைக்கேட்டு அரண்டுபோன ஹரிகிருஷ்ணன் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு ஓடினார்.. தனக்கு நடந்த கொலை முயற்சி குறித்தும் புகார் தந்தார்.. இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை பிடித்து போலீஸ் விசாரித்தது..
அப்போது, கூலிப்படையை ஏவி ஹரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை இருவருமே ஒப்புக்கொண்டனர். பிறகு, கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் உட்பட கள்ளக்காதல் ஜோடி என மொத்தம் 5 பேரையும் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தாலும், பெரும் அதிர்ச்சியை காஞ்சிபுரத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications