பஸ்ல புட் ஃபோர்டா அடிக்கிறீங்க! இனி வாய்ப்பில்லை ராஜா.. டிரைவர், கண்டக்டரின் புது டெக்னிக்
காஞ்சிபுரம்: அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க காஞ்சிபுரம் அரசு பணிமனையில் டிரைவரும் கண்டக்டரும் செய்யும் செயல் பலரை ஆச்சரியப்படுத்தியது.
புத்திமதிகள் இலவசமாக வழங்கப்படுவதால் அதை யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஃப்ரீ அட்வைஸ் வேண்டாம் என சொல்லிவிட்டு கடந்து செல்வார்கள். இவர்களுக்கு பட்டால்தான் தெரியும்.

போக்குவரத்து விதிகளை மீறாதே, நெருப்புடன் விளையாடாதே! படிக்கட்டில் தொங்காதே, டிரிப்ள்ஸ் செல்லாதே, வேகத்தை விட விவேகமே சிறந்தது போன்ற அறிவுரைகளை சொன்னால் கூட இந்த காலத்து பசங்க கேட்பதில்லை, அதற்கு பதிலாக அறிவுரை சொல்வோரை பூமர் அங்கிள், பூமர் ஆன்டி என சொல்லிவிட்டு கடந்து விடுவார்கள்.
இன்று விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவது ஒரு புறம் இருந்தாலும் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வார்கள். பேருந்துக்குள் என்னதான இடம் இருந்தாலும் சரி மேலே ஏற மாட்டார்கள். ஏறுவோருக்கும் இறங்குவோருக்கும் வழி விடவே மாட்டார்கள். இப்படி தொங்கிக் கொண்டு செல்வதால் மரணமோ உடல் உறுப்புகளையோ நிறைய பேர் இழந்துள்ளார்கள்.
படியில் பயணம் நொடியில் மரணம் என எழுதியிருந்தாலும் அதை கண்டு கொள்வதே இல்லை. இது தொடர்பாக குன்றத்தூர் அருகே பேருந்தில் பயணம் செய்தவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் கண்டித்து தாக்கியும் உள்ளார். ஆனாலும் இந்த படி பயணங்கள் தொடர்கின்றன. இதனால் தற்போது தயாரிக்கும் பேருந்துகள் எல்லாம் இரு புறமும் தானியங்கி கதவுகளை கொண்டுள்ளது.
இதனால் படிகட்டுகளில் தொங்கி கொண்டு வரவே முடியாது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் பேருந்துகளில்தான் இப்படி ஒரு அபலங்கள் நடக்கின்றன. அதிலும் பஸ் டே அன்று பேருந்தின் கூரை மீதெல்லாம் ஏறுவார்கள். இந்த நிலையில் இளைஞர்களை பாதுகாக்கும் பொருட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பேருந்து ஒன்றில் அரசு ஓட்டுநரும் கண்டக்டரும் புதிய டெக்னிக்கை பாஃலோ செய்துள்ளனர்.
அதன்படி படிக்கட்டில் தொங்கும் போது இளைஞர்கள் கிரிப்புக்காக விண்டோ சீட்டின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொள்வார்கள். எனவே அந்த கம்பியை பிடிக்காதபடி அந்த ஜன்னலையே தகடு வைத்து மூடி வெல்டிங் செய்து வருகிறார்கள். இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. எனினும் இனி வெயில் காலம் வரும் போது விண்டோ சீட்டில் தகடு அடித்துவிட்டால் அந்த சீட்டில் உட்காருவோருக்கு காற்றோட்டமும் வெளிச்சமும் குறைவாக இருக்கும் என கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications