நாங்கதான் பாடுவோம்.. வெளியே போயா! மாறி மாறி மோதிய வடகலை தென்கலை! மூச்சு விட முடியல.. திணறிய போலீஸ்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
தமிழ்நாட்டில் அவ்வப்போது கோவில்களில் வடகலை, தென்கலை பிரிவினருக்கு இடையில் மோதல் நடப்பது வழக்கும். கோவில் சடங்குகள், பூஜைகளை செய்வதில் மோதல் நடக்கும்.
கோவிலுக்கு உள்ளேயே இவர்கள் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவங்களும் கூட நடந்துள்ளன.

மோதல்
திவ்ய பிரபந்த பாடல்களை வடகலை பிரிவினர் பாட கூடாது என தென்கலை பிரிவினர் தடுத்ததால் கோவிலில் சச்சரவு ஏற்பட்டு சுவாமி வீதி உலா செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சலசலப்பால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று ஐந்தாம் நாள் வரதர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்.

என்ன நடந்தது
வீதி உலா செல்லப் புறப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வடகலை, தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாடும் போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முதலில் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைலேச பாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். இதனைத் தொடர்ந்து இருவரும் பிரபந்தங்களை சேர்ந்து பாட முற்படும்போது இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.

நாங்கதான் பாடுவோம்
திவ்ய பிரபந்தத்தின் பல்லாண்டு பாடல்களை நாங்கள்தான் பாடுவோம் என தென்கலை பிரிவினர் அடம் பிடித்தனர்.நாங்கதான் பாடுவோம் வெளியே போயா என்று தென்கலை பிரிவினர் அடம் பிடித்தனர். இரண்டு பிரிவினரும் சேர்ந்து திவ்யபிரபந்த பாடலை பாடவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொள்ளாமல் திவ்விய பாடல்கள் பாடுவதை தென்கலை பிரிவினர் புறக்கணித்தனர்.

தோல்வி
இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த காவல்துறையினரும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும் முயற்சித்தனர். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதில் வயதான பூசாரிகள் சிலர்.. மூச்சு வாங்குவதாக புகார் கொடுக்க.. போலீசாரே.. மூச்சு விட முடியவில்லையாம்.. வெளியே போய் பேசிக்கலாம்.. கூட்டமாக நிற்க வேண்டாம் என்று கூறினர்.

சலசலப்பு
இந்த சம்பவங்கள் அங்கு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் யாளி வாகனத்தில் பெருமாள் வீதியுலா செல்வது காலதாமதமானது. வரதரை காண வெகு நேரம் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகளை வாழ்த்தி பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகரை வாழ்த்தி பாடினர்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications