காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷன் போட்டி.. பாஜக கூட்டணியில் வேட்பாளரை அறிவித்த பாமக..
காஞ்சிபுரம்: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட உள்ளது. இந்நிலையில் தான் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காஞ்சிபுரம் தொகுதியின் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட உள்ளது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம் தவிர 9 தொகுதிகளுக்கு இன்று காலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் தான் இப்போது காஞ்சிபுரம் தொகுதிக்கான பாமக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக சார்பில் ஜோதி வெங்கடேஷன் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications