டூட்டிக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு போன அரசு மருத்துவர்.. "முதல்வன்" பட பாணியில் மா.சு. ஆக்ஷன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் விசிட் அடித்த நிலையில் அங்கு டூட்டியில் மருத்துவர் வராததை அறிந்து கோபமடைந்தார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காஞ்சிபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு ஒரு நீளமான நாற்காலியில் மூதாட்டி ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் மா.சுப்பிரமணியன், என்னாச்சும்மா உடம்புக்கு என கேட்கிறார், அதற்கு அந்த மூதாட்டி, காய்ச்சல் என்கிறார். டாக்டரை பார்த்தீர்களா என கேட்கிறார். அதற்கு அந்த மூதாட்டி இல்லை என்கிறார்.
உடனே இங்கு டூட்டி டாக்டர் எங்கே என கேட்கிறார். அப்போது செவிலியர் ஒருவர் வந்து சார் நான் நர்ஸ், டாக்டர் இன்னும் வரவில்லை, வர நேரம்தான் என்கிறார். எத்தனை மணிக்கும்மா டூட்டி என விடாமல் கேட்கிறார். அதற்கு எந்த நர்ஸ் காலையில் 8 மணிக்கு சார் என்கிறார். இப்போ மணி பத்து ஆச்சே இன்னுமா வரவில்லை டாக்டர் என கேட்ட மா.சுப்பிரமணியன், எங்கம்மா டாக்டருக்கு போன் போடுங்க என்கிறார்.
உடனே அந்த நர்ஸ் போன் போட்டு கொடுக்கிறார். அப்போது மா.சுப்பிரமணியன், சார் எங்க இருக்கீங்க என கேட்கிறார், ஆயுஷ்மான் பவ திட்ட தொடக்க விழாவில் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். அதற்கு மா.சு. என்ன திறப்பு விழா, ஆயுஷ்மான் பவ கடந்த வாரமே நடந்துவிட்டதே!, நான் என்ன கேட்கிறேன்! உங்களுக்கு டூட்டி இந்த மருத்துவமனையில்தானே சார்.
இங்கு வரும் நோயாளிகளை யார் பார்ப்பாங்க, உங்களுடன் இருந்த இன்னொரு டாக்டரும் இல்லையே என்கிறார். அதற்கு அந்த டாக்டர் அந்த டாக்டர் பார்த்துவிட்டு போய்விட்டார் என்கிறார். அதற்கு மா.சு. பார்த்துட்டு போய்ட்டாங்கன்னா , மணி இப்போ 12 கூட ஆகவில்லையே. 9 மணி முதல் 4 மணி வரைதானே டூட்டி? நான் யார் பேசுறது தெரியுமா, ஹெல்த் மினிஸ்டர் என்கிறார்.
நான் இப்ப உங்களை சஸ்பெண்ட் செய்கிறேன். இந்த மருத்துவமனைக்கு கடைசியாக எப்போது வந்தீர்கள் என கேட்டுவிட்டு மற்றொரு பெண் மருத்துவருக்கு போன் செய்து கையெழுத்து போட்டுவிட்டு டூட்டிக்கு ஏன் வரவில்லை என கேட்கிறார். மேலும் இது உங்க கையெழுத்தா இல்லாட்டி யாருடைய கையெழுத்து என்றும் கேட்டுள்ளார். முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக இருக்கும் அர்ஜுன் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்திவிட்டு சம்பந்தப்பட்டவர்களை அந்த இடத்திலேயே சஸ்பெண்ட் செய்வது போல் மா.சுப்பிரமணியனும் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications