மார்பகத்தில் கீறல்கள்.. ரெட் கலரில் கழுத்து.. உடம்பெல்லாம் காயம்.. இளம்பெண் மர்ம மரணம்.. படப்பையில்!
வடமாநில பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்
காஞ்சிபுரம்: மார்பகங்களில் கீறல்கள்.. கழுத்து ரெட் கலரில் உறைந்து கிடந்தது.. உடம்பெல்லாம் காயங்கள்.. வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் சடலத்தை இந்த நிலையில்தான் போலீசார் கண்டெடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகேயுள்ள உள்ள பகுதி ஆதனஞ்சேரி.. இங்கு ஒடிசா மாநிலத்தை சேரந்த பெண் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 22 வயது பெண்.. இவர் ஒரகடத்தில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காகதான் ஆதனஞ்சேரியில் இவரும் ரஞ்சிதா என்ற இளம்பெண்ணும் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். சம்பவத்தன்று ரஞ்சிதா மட்டும் வேலைக்கு சென்றுள்ளார். தீபா நாள் முழுக்க வீட்டில் இருந்தார்.

தூக்கம்
சாயங்காலம் வேலை முடிந்து ரஞ்சிதா வீட்டிற்கு வந்துள்ளார்... வெளிக்கதவு கதவு திறந்து கிடந்தது.. அப்போது தீபா தூங்கி கொண்டே இருந்துள்ளார்.. சாயங்கால நேரத்துல ஏன் இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று நினைத்து, தீபாவை ரஞ்சிதா எழுப்பினார்.. பலமுறை குரல் கொடுத்தும் தீபா எழவே இல்லை.

கீறல்கள்
அருகில் சென்று பார்த்தபோதுதான், தீபாவின் உடம்பெல்லாம் காயங்களும் கீறல்களும் இருந்தன.. அதனால் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அழைத்து சென்றார். ஆனால் தீபா உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

விசாரணை
மேலும் அவரது உடம்பில் காயங்கள் உள்ளன, என்றும் மார்பகத்தில் நிறைய கீறல்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். கழுத்து பகுதி சிவந்து இருந்தது என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.. விசாரணையில் தீபா, மீராம் நகர், பெர்ஷாம்பூர் பகுதியை சேர்ந்தவர்.. மணிஷ் என்பவரை தீபா காதலித்து வந்திருக்கிறார்.

தகராறு
அவர் சோழிங்கநல்லூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவர்.. இப்போது தீபா மர்ம மரணத்துக்கு பிறகு அவர் மாயமாகி உள்ளது மேலும் சந்தேகத்தை போலீசாருக்கு எழுப்பி உள்ளது.. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆபில் உள்ளது.. சம்பவத்தன்று அவர் வீட்டுக்குக்கு வந்தாரா, அவர்களுக்குள் என்ன தகராறு என்பது குறித்த விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்... ஆனால் அவர்தான் இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்று முதற்கட்டமாக தெரிவித்துள்ள போலீஸார் மணிஷை தேடி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications