தேர்தல் பூத்தில் நாம்தான் இருப்போம்.. புரியுதா? அன்புமணி சர்ச்சை பேச்சு.. அதிர்ச்சி வீடியோ!
தேர்தல் பூத்தில் நாம்தான் இருப்போம், நமக்குத்தான் வெற்றி என்று பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

காஞ்சிபுரம்: தேர்தல் பூத்தில் நாம்தான் இருப்போம், நமக்குத்தான் வெற்றி என்று பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக இளைஞரணி தலைவர் எம்.பி அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று அன்புமணி பிரச்சாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இவர் பிரச்சாரம் செய்தார்.
அவர் தனது பேச்சில், தேர்தலில் என்ன நடக்கும் தெரியுமா.. பூத்தில் யார் இருப்பார்கள்.. நம்மதான் இருப்போம் பூத்தில்.. சொல்றது புரியுதா இல்லையா?... நாமதான் இருப்போம்.. புரிஞ்சிக்கிட்டிங்களா.. வெற்றி யார் பெறப்போறாங்கன்னு சொல்லனுமா வெளியில், என்று அன்புமணி குறிப்பிட்டு இருக்கிறார்.
Is PMK leader Anbumani Ramadoss hinting at a possible booth capture in Kancheepuram constituency? Very controversial statement. #PMK #AIADMK #Elections2019 #TNPolitics pic.twitter.com/iSF2cN4e0r
— Shilpa Nair (@NairShilpa1308) April 5, 2019
அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக கூட்டணி கட்சிகள் பூத்தை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறதா, தேர்தலில் முறைகேடு நடக்க போகிறதா? என்று பெரிய கேள்வியும், விவாதமும் எழுந்து இருக்கிறது. இவரின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு எதிராக புகார் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விரைவில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications