ஆமா நானும் விசாரித்தேன்! எல்லாம் பொய்ங்க! வட மாநிலத் தொழிலாளர்கள் நல்லா இருக்காங்க! -அன்புமணி
வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றி தவறான தகவல் பரவ வாட்ஸ் அப்பே காரணம் என அன்புமணி குற்றச்சாட்டு.
காஞ்சிபுரம்: வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என்பது பொய்யான தகவல் என்றும் இது பற்றி தாமும் விசாரித்ததாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சில வாட்ஸ் அப் தளங்கள் தான் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அது தொடர்பான விவரம் வருமாறு;

வாட்ஸ் அப்
''வட மாநில தொழிளர்கள் விவகாரத்தில் சில வாட்ஸ் அப் தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. இது பற்றி நானும் விசாரித்தேன், அது போன்று சம்பவம் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழ்நாடு வளர்ச்சிக்கு, அனைவரும் தேவை. ஆனால் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.''

சட்டசபை முன்பு போராட்டம்
''என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் , அதற்கான ஒப்புதலை முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும். முதல்வர் ரத்து என்று அறிவிப்பை செய்யவில்லை என்றால் , கடலூரில் உள்ள விவசாயிகளை அழைத்துச் சென்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன்.''

தமிழ்நாட்டுக்கு அவமானம்
''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்பற்றி பேசாமல் இருப்பது நல்லது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு அவமானம், தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா ? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது. இடைத்தேர்தல் என்பதே தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு, ஈரோடு இடைத்தேர்தல்லில் வெற்றி பெறவில்லை, அதை பணம் கொடுத்து வங்கியுள்ளார்கள்.''

அனைத்து கட்சி கூட்டம்
''காலநிலை மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் நேற்றுக் கூட ஒருவர் இறந்துள்ளார். ஆளுநரிடம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடிதம் அளிக்கப்பட்டு 115 நாட்கள் ஆகிறது. இந்த 115 நாட்களில் 16 நபர்கள் இறந்துள்ளார்கள் அதற்கு ஆளுநர் ராவி தான் பொறுப்பு.''
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications