பொருளாளர்களுக்கு வந்த சோதனை! அன்று தவெக வெங்கட்ராமன்! இன்று பாமக திலகபாமா! விஐபி பாஸ் இருந்தும்!
செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்திற்கு வந்திருக்கும் பாமக அன்புமணி அணியின் பொருளாளர் திலகபாமாவிடம் (PMK Thilagabama) விஐபி பாஸ் இருந்தும் அவரை விஐபிக்களுக்கான பாதையில் அனுமதிக்கவில்லை என போலீஸார் மீது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகள் கலந்து கொள்கின்றன.

அதிமுக, அன்புமணி பாமக, பாஜக, ஐஜேகே, அமமுக, தமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து அவர் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். இந்த நிகழ்வுக்கு அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்துவிட்டனர். அவர்களை பாஜகவினர் வரவேற்று அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வைக்கிறார்கள்.
என்டிஏ கூட்டணி
தொண்டர்கள், நிர்வாகிகள் வருவதற்கு தனி பாதை உள்ளது. அது போல் என்டிஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் செல்ல விஐபி பாதை உள்ளது. இதற்காக கட்சிகள் சார்பில் யாருக்கு விஐபி பாஸ் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுத்துவிட்டனர். அதை விஐபி கேட்டில் இருக்கும் போலீஸாரிடம் காட்டி விட்டு உள்ளே செல்ல வேண்டியதுதான்.
பாமக திலகபாமா
அப்படித்தான் அன்புமணி பாமகவின் பொருளாளராக இருக்கும் திலகபாமாவுக்கும் விஐபி பாஸ் வழங்கப்பட்டுவிட்டது. அந்த பாஸை காட்டிய போது அவரை அனுமதிக்க போலீஸார் மறுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பொருளாளர் திலகபாமா
இதுகுறித்து அவர் பாஸை காட்டியபடி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஸ் கைலதான் வச்சி இருக்கேன். ஆனால் என்னை உள்ளே விடாமல், அங்க போங்க, இங்க போங்கன்னு அலைக்கழிக்கறாங்க.
3 கி.மீ. தூரம்
இப்படியே அங்க இருக்கிற விஐபி கேட்டுக்கு போக விடாமல் 3 கி.மீ. தூரம் சுத்திக்கிட்டு வர சொல்றாங்க. தமிழக போலீஸ் மாற்று கட்சியினரின் கூட்டங்களுக்கு இப்படிதான் தொல்லை கொடுக்கிறது என கூறினார்.
தவெக பொருளாளருக்கும் இதே நிலைதான்
இதே போல்தான் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திலும் அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமனை விஐபி வழியில் விடாமல் போலீஸார் தடுத்தனர்.
தவெக பொருளாளர் வெங்கட்ராமன்
அப்போது வெங்கட்ராமன், "நான் இந்த கட்சியின் பொருளாளர்" என சொல்லியும் அவரை விடவில்லை. பின்னர் அவ்வழியாக சென்ற புஸ்ஸி ஆனந்த்தை அவர் அழைத்தும் , அவர் கவனிக்கவில்லை. இதனால் அங்கு சலசலப்பு எழுந்தது.
விஐபி கேட்டில் அனுமதி மறுப்பு
அதாவது விவிஐபிக்கள் செல்லும் பாதையில் யார் யார் கார்கள் செல்ல வேண்டும் என்பதற்காக வாகனங்களின் பதிவு எண் கொண்ட பட்டியல் போலீஸாரிடம் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அந்த பட்டியலில் வெங்கட்ராமனின் கார் எண் இல்லை என்பதால் அவரை விடவில்லை. பிறகு விஜய்யின் தனியார் பாதுகாவலர்களை அழைத்து அவர்கள் வந்து போலீஸாரிடம் கூறியதன் பேரில் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
இதே போல் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு கூட்டம், மாமல்லபுரத்தில் நடந்த கூட்டம் ஆகிய இடங்களிலும் வெங்கட்ராமனின் கார் விஐபி பாதையில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications