ரஜினி வந்தால் சூடு பிடிக்கும்.. மோதலாம்.. "ஐ அம் வெயிட்டிங்" சீமான் தில் சவால்!
சுங்குவார் சத்திரம் கூட்டத்தில்.. ரஜினியை தாக்கி பேசிய சீமான்
Recommended Video

காஞ்சிபுரம்: ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்தி வரதருடனும் ஒப்பிட்டு சீமான் பேசியுள்ளது மிகப்பெரிய சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அத்தி வரதர் சிலை 48 நாள் தரிசனத்துக்கு பிறகு திரும்பவும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
"அத்தி வரதர், அத்தி வரதர், அத்தி வரதர்.. தொலைக்காட்சியை திருப்பினால் அத்தி வரதர். கடைசியா நயன்தாராவும், ரஜினியும் குட்பாய் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அவர் இவ்வளவு நாள் எவ்வளவு பெருமைக்குரியவராக இருந்தாரோ அவ்வளவும் சிறுமைப்படுத்தி ஆக்கிட்டீங்களே.. கொடுமை!

அத்திவரதர்
ஒரே ஒரு மகிழ்ச்சி.. வெங்கடாஜலபதிக்கு மார்கெட் போச்சு.. 48 நாள்ல அத நம்ம ஆளு அடிச்சிட்டாருன்னு சொன்னாங்க. ரஜினிகாந்தை வீழ்த்தி தம்பி விஜய் வர்றது மாதிரி அது ஒரு பெருமைதான் நமக்கு.. டேய் காஞ்சிபுரத்துல நம்மாளுக்கு கூட்டம்.. விடுடா விடுடான்னு அது ஒரு பெருமை.

எடப்பாடி
எடப்பாடியை பேசி ஸ்டாலினால் ஒன்னும் சோபிக்க முடியல. ஏன்னா அவரே ஒரு புள்ளைபூச்சியா இருக்காரு. இந்த நேரத்துல தமிழ்நாட்டுல ஒரு ஷோ மேச் நடக்குது. ஒரு டம்மி.. ஒருவேளை ஐயா ரஜினிகாந்த் வந்தால், சூடு பிடிக்கும் ஆட்டம். சரி.. வா மோதலாம்!

மான தமிழன்
சண்ட தீவிரமடைய போகுது.. பீடல் காஸ்ட்ரோ, வாழும் சேகுவேரா, வாழும் காமராஜர், அய்யா தமிழருவி மணியன்னு சொல்ற கடைசி கருணை.. அரிசி குருணை.. அய்யா ரஜினி கட்சி ஆரம்பிச்சு வரப்போராருனு சொல்றாங்க, தம்பி விஜய் படத்துல வரமாதிரி ஐ அம் வெய்டிங்'.. வெயிட்டிங்.. வெயிட்டிங்.. வா.. சண்டை வலுவா நடக்கும். மானத்தமிழனா, மராட்டியனா என்பதை அப்போ பாக்கலாம்" என்றார்.

பரபரப்பு
ரஜினிகாந்தை திருப்பதி ஏழுமலையானுடனும், விஜய்யை அத்தி வரதருடன் ஒப்பிட்டு பேசியதுடன், ரஜினியை தாறுமாறாக சீமான் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications