கருகிய முகத்துடன் ஏரியில் மிதந்த 3 சடலங்கள்.. ப்ளஸ் 2 மாணவர்களாச்சே! கதிகலங்கிப் போன காஞ்சிபுரம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் ஊராட்சியில் விழுதவாடி என்ற கிராமம் உள்ளது. அதற்கு அருகே உள்ள ஏரிக் கரையில் மூன்று உடல்கள் மிதப்பதாக பகுதி மக்கள் உத்தரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மிதந்த மூன்று சடலங்கள் மீட்கப்பட்டது. கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே அந்த சடலங்கள் ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களது முகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில் அவர்கள் பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. மூன்று பேருமே வாலாஜாபாத் அருகே இருக்கும் பள்ளியில் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது உடலை மீட்ட போலீசார் உடற் கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்த பரத்திற்கும் சிறுமையூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மோதலில் மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications