பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த தமிழ்நாடு அரசு
சென்னை: 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான சம்பா நெற்பயிர், இதர பயிர்களை காப்பீடு செய்ய டிசம்பர் 1 ஆம் தேதி வரை காலக்கெடுவை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது:-
2025-2026ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை காப்பீடு செய்ய, குத்தகை விவசாயிகளுக்கு விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து விலக்களித்து, அனைத்து விவசாயிகளும் 2025, டிசம்பர், 1 ஆம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு
2025-26ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து ஒன்றிய அரசால் விலக்களிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025 செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது. எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30 ஆம் தேதி வரை ஒன்றிய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
7.95 லட்சம் விவசாயிகள்
இதுநாள்வரை, 31.33 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 லட்சம் விவசாயிகளால் 19.06 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 61 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் ஏக்கர் கூடுதலாகும். மேலும், இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் 66 ஆயிரம் விவசாயிகளால் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், 2025 நவம்பர் 25 ஆம் தேதி முதல் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்று ஒன்றிய அரசால் மீண்டும் அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் அடையாள எண் பெற்ற நில உரிமைதாரர்கள் தவிர, குத்தகைதாரர்கள். கோயில் நில சாகுபடியாளர்கள் போன்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக, 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி வரை
எனவே, 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெற்றுக்கொள்ளுமாறு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டுத்தொகை ஒன்றிய அரசின் பங்குதொகையான 67 கோடி பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications