10 வயதில் அக்காவை கள்ளக்காதலனுடன் பார்த்த சிறுவன்..12 வருடம் காத்திருந்து..காஞ்சியில் பயங்கர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சகோதரியின் கள்ளக்காதலனை 12 வருடம் காத்திருந்து தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கள்ளக்காதல் காரணமாக கொலை மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

காஞ்சிபுரம் அடுத்த சின்ன ஐயங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதன் 38. இவர் மனைவி ஷீலா 33 மற்றும் மகன் , மகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பே வரதனின் மனைவி ஷீலாவுக்கும் கனகராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஷீலாவின் கணவர் வரதன் வெளியில் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வீட்டிலேயே ஷீலா வரதனுடன் உல்லாசமாக இருந்துள்ளார் .நாளடைவில் தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் வரதனுக்கு தெரிய வந்தது.

மதுபோதை

மதுபோதை

அதையடுத்து வரதன் பலமுறை தனது மனைவி ஷீலாவிற்கு அறிவுரை வழங்கியும் , ஷீலா கள்ளக்காதல் தொடர்பை கைவிடவில்லை. இதனால் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தேனம்பாக்கம் பகுதியில் வரதன் தனியாக வசிக்க தொடங்கியுள்ளர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஷீலாவின் கள்ளக்காதலன் கனகராஜ் ஷீலாவுடன் தொடர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து மதுப்போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

கள்ள உறவு

கள்ள உறவு

இந்நிலையில் தற்போது 22 வயதாகும் ஷீலாவின் தம்பி ராஜ், சகோதரியின் கள்ள உறவை பத்து வயது முதல் பார்த்து வந்துள்ளார். சிறுவன் என்பதால் எதுவும் சொல்ல முடியாமலும், எதுவும் செய்யமுடியாமலும் தவித்து வந்துள்ளார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

தனது சகோதரி ஷீலா குறித்து ஊர்மக்கள் அவதூறாக பேசுவதையும், இத்தனை ஆண்டுகள் சகித்துக் கொண்டு வந்த நிலையில் தனது சகோதரி ஷீலாவின் கள்ளக்காதல் விவாகரத்தால் பல வருடங்களாக மன அழுத்தத்திலேயே இருந்து வந்துள்ளார்.

அதிகாலை

அதிகாலை

இந்நிலையில் நேற்று இரவு ஷீலாவின் தம்பி ராஜ் மற்றும் அவரது நண்பர் சதாவரம் உதயகுமார் , சகோரியின் கள்ளக்காதலன் கனகராஜ் ஆகியோர் கூட்டாக இணைந்து வீட்டருகே அதிகாலை 2மணி வரை மது அருந்தியுள்ளனர்.

பாட்டிலால் கொலை

பாட்டிலால் கொலை

மதுபோதையில் ஷீலாவின் கள்ளக்காதலன் கனகராஜுக்கும் ஷீலாவின் தம்பி ராஜுவுக்கும் சகோதரியின் கள்ளக்காதல் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஷீலாவின் தம்பி ராஜ் பீர் பாட்டிலை கனகராஜ்யின் தலையில் உடைத்தும், கனகராஜ்யின் கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாகக் குத்தியும் அருகிலிருந்த அம்மிக்கல்லால் கனகராஜ்யின் முகத்தை சிதைத்தும் கொடூரமாக தனது ஆத்திரம் தீரும் வரை கொலை செய்துள்ளார்.

வலைவீச்சு

வலைவீச்சு

இதன்பின் ஷீலாவின் தம்பி ராஜ் மற்றும் அவரது நண்பர் உதயகுமார் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர்.
பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட கனகராஜ்யின் உடலை மீட்பு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாகவுள்ள ஷீலாவின் தம்பி மற்றும் அவரது நண்பரை வலை வீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

தனது சகோதரியின் கள்ளக்காதலனை 12 வருடம் காத்திருந்து தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் நடந்த 10 கொலை சம்பங்களில் 5க்கும் மேற்பட்ட கொலைகள் கள்ளத்காதல் தொடர்பால் அரங்கேறியுள்ளது. தொடர் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+