காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புடிங்க.. புடிங்க.. விரட்டி சென்ற வினோத்.. ஆனால் இப்படி நேரும் என யாரும் நினைக்கவில்லை!

செங்கல்பட்டு அருகே சுங்கசாவடி ஊழியர் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    நிற்காமல் போன வண்டி, விரட்டி சென்ற வினோத்துக்கு நிகழ்ந்த பரிதாபம்- வீடியோ

    காஞ்சிபுரம்: "புடிங்க.. புடிங்க.." என்று சத்தம் கேட்கவும், நிற்காமல் சென்ற பைக்கை விரட்டி பிடிக்க பின்னாடியே சென்றார் வினோத்.. ஆனால் இப்படி விபரீதம் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு எப்பவுமே நிறைய போக்குவரத்து வாகனங்கள் வந்துபோகும் என்பதால், இந்த சுங்கச்சாவடி பரபரப்பாக இருக்கும். இங்கு புலிப்பாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயசு 27. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆனது.

    The mystery death of the Customs staff near Chengalpatttu

    முன்தினம் இரவு அந்த வழியாக வந்த வண்டிகளுக்கு வினோத் மற்றும் சில ஊழியர்கள் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு, ஒரு வண்டி நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அந்த வண்டியை விரட்டி பிடிக்க வினோத் உட்பட சக ஊழியர்களும் பின்னாடியே சென்றார்கள்.

    ஒருவழியாக புறவழி சாலையில் மடக்கி பிடித்து வண்டி ஓட்டிக் கொண்டு போனவரை நன்றாக வெளுத்து, போலீசிலும் ஒப்படைத்துவிட்டனர். ஆனால், விரட்டிக் கொண்டு போன வினோத்தை காணவில்லை. கூடவே வந்த சக ஊழியர்கள் ரொம்ப நேரம் தேடி பார்த்தார்கள்.

    ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக தொமுச சண்முகம், வக்கீல் வில்சன் போட்டி- மதிமுகவுக்கு 1 இடம்!ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக தொமுச சண்முகம், வக்கீல் வில்சன் போட்டி- மதிமுகவுக்கு 1 இடம்!

    பிறகு, இருபுறவழி சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் வினோத் விழுந்து பலியாகியது தெரியவந்தது. வினோத் இந்த பள்ளத்துக்குள் எப்படி விழுந்திருப்பார் என தெரியவில்லை.

    கட்டணம் செலுத்தாத வாகனத்தை துரத்தி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    Customs staff dead near Chengalpatttu and Police investigation is going on this mystery murder
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X