தட்டித் தூக்குது தமிழக அரசு.. உதயநிதி கொடுத்த தீபாவளி பரிசு! அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!
காஞ்சிபுரம்: கலைஞர் உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் வழங்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் உரிமைத் தொகைக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அனைவருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் சென்றுள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன் ஒரு பகுதியில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழக அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 17 துறைகளைச் சேர்ந்த 4997 பயனாளிகளுக்கு ரூ.253 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின்
விழாவில், 3846 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதோடு, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன. மேலும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை; அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம்; ஆனால், திமுக அரசுதான் சமூக நீதிக்கான அரசு. திமுக அரசின் முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகள் செல்லம் திட்டம், மற்றும் காலை உணவு திட்டம் என சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
மகளிர் உரிமைத் தொகை
தற்போது தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும்" என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
முக ஸ்டாலின்
அண்மையில் வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தார். மேலும் இந்த மாதம் அல்லது நவம்பர் மாதத்திலேயே ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தமிழ்நாடு அரசு
45 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த மாதம் அல்லது அக்டோபர் மாதத்திலேயே அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. அது மட்டும் அல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பாடு மகளிருக்கு புதிய விலக்குகளும் அளிக்கப்பட இருக்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பப் பெண்கள், பிற ஓய்வூதிய திட்டங்களை பெறும் ஓய்வூதியம் பெறுவோர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications