''காஞ்சி சங்கரமடத்தை தரைமட்டமாக்கி விடுவோம்''! விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆவேசம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கி விடுவோம் என என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் எழிலரசு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எதிரே பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விசிக மாவட்டச் செயலாளர் எழிலரசு, சங்கர மடம் மீதான தனது கோபத்தை கொட்டித்தீர்த்தார்.

விசிக மாவட்டச் செயலாளர் எழிலரசு பேசிக்கொண்டிருந்த போது, அதிக சப்தத்தில் சங்கர மடத்தில் சுப்ரபாதம் ஒலிக்கவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் விசிக மாவட்டச் செயலாளர் ஆத்திரமடைந்து, சங்கர மடத்தை அடித்து நொறுக்குவோம் என பேசியதாக காரணம் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் வந்தால் போதும் சங்கர மடத்தின் செங்கற்கள் தனித்தனியாக பெயர்த்து எடுக்கப்படும் என எழிலரசு பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அங்கிருந்த காவல்துறையினர் காஞ்சி சங்கர மட நிர்வாகிகளிடம் கூறி ஆர்ப்பாட்டம் முடியும் வரை சுப்ரபாதம் ஒலிக்க விட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவித நிகழ்வுகளில் ஏதும் இறங்கிவிடக் கூடாது என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சங்கர மடத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதை நிறுத்தியதும், பேச வந்த கருத்தை பேசிவிட்டு பாசிச எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனால் காஞ்சிபுரம் நகர காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications