Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விபச்சாரம்".. எஸ்தர் வீட்டுக்குள்ளேயே கிறங்கிய கும்பல்.. வாசற்படியிலேயே கிடந்த திமுக பிரமுகர் "தலை"

திமுக பிரமுகரை வெட்டிக் கொன்ற எஸ்தர் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஒரு திமுக பிரமுகரை, அரிவாளால் ஓட ஓட விரட்டி கொண்டே வெட்டி கொன்றுள்ளார் ஒரு பெண்.. அவர் பெயர் லோகேஸ்வரி.. யார் இவர்?

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்..

30 வயதாகிறது.. திமுக வார்டு செயலாளர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நடுவீரப்பட்டு ஊராட்சி 3வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று பதவி வகித்து வந்துள்ளார்..

நடுவரப்பட்டு ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார்.. தேர்தல் வரப்போகிறது என்றாலே, சதீஷ் களத்தில் இறங்கிவிடுவாராம்.. அந்த அளவுக்கு அப்பகுதி மக்களிடம் பிரபலமாக இருந்திருக்கிறார்.

 தில் சதீஷ்

தில் சதீஷ்

அதுமட்டுமல்லாமல், இயல்பாகவே, சமூக அக்கறை உள்ள இளைஞராகவும் திகழ்ந்துள்ளார்.. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் துணிச்சலுடையவர் சதீஷ்.. சில சமூக விரோத செயல்கள் குறித்து போலீசாருக்கும் அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக தெரிகிறது... அந்தவகையில் கள்ளச்சாராயம் விற்கும் லோகேஸ்வரி பற்றியும் தகவல் தந்துள்ளார்.. சதீஷ் ஒரு தகவல் தந்தால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் போலீசாரும் விரைந்து செயல்படுவார்களாம்..

நயவஞ்சகம்

நயவஞ்சகம்

லோகேஸ்வரி பற்றின புகார்கள் பல, போலீசாருக்கு வந்திருந்த நிலையில், சம்பவத்தன்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். அப்போது ஏராளமான கள்ளச்சாராயங்களை கைப்பற்றி, கள்ளச்சந்தையில் மதுவை விற்கவிடாமல் போலீசார் தடுக்க முயற்சித்துள்ளனர்.. இதனால் லோகேஸ்வரியின் வருமானம் தடைபட்டுவிட்டதால், ஆத்திரம் முழுக்க அவருக்கு சதீஷ் மீது திரும்பியது.. சதீஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.. நயவஞ்சகமாக தன் வீட்டிற்கு சதீஷை அழைத்தார்..

 வீட்டு வாசல்

வீட்டு வாசல்

சமரச பேச்சுவார்த்தைக்குதான் லோகேஸ்வரி அழைப்பதாக நினைத்த துணிச்சல் கொண்ட சதீஷூம், அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.. மிகப்பெரிய அரிவாளை எடுத்து, சதீஷின் தலையை துண்டாக வெட்டி உள்ளார் லோகேஸ்வரி.. அந்த தலையை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வந்து, வாசலில் கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டார்.. பிறகு, வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சோமங்கலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. விசாரணையும் நடத்தி வருகிறார்கள்..

 மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி

கொலை சம்பவத்தை லோகேஸ்வரி மட்டும் செய்தாரா அல்லது வேறு யாருடன் இணைந்து இந்த கொலையை செய்தாரா என்று கோணத்திலும் போலீசார் ஒரு பக்கம் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர் என்றாலும், மிகுந்த பரபரப்பையும், அளவுக்கதிகமான அதிர்ச்சியையும் இந்த சம்பவம் ஏற்டுத்தி வருகிறது.. சதீஷ் கொலை செய்யப்பட்டது அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகிறது.. கள்ளச்சந்தையில் மதுவிற்ற பெண்ணை தட்டி கேட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை, இந்த அளவுக்கு படுகொலை செய்துள்ளார்கள் என்றால், சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறதா? என்றும் கேள்வியை எழுப்பி கொண்டிருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்..

எஸ்தர்

எஸ்தர்

அதேசமயம், ஒரு பெண் அரிவாளால் இளைஞரின் தலையை தனியாக வெட்டி எடுத்துள்ள நிலையில், இவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சதீஷின் வீட்டுக்கு பக்கத்திலேயே வசித்து வருகிறாராம் இந்த லோகேஸ்வரி.. எஸ்தர் என்று இன்னொரு பெயரும் இவருக்கு உள்ளதாம்.. தனக்கு 30 வயது ஆகிறது என்று யார் கேட்டாலும் சொல்லுவாராம்.. ஆனால், இவருக்கு உண்மையான வயது 45க்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள்.. இந்த பெண்ணுக்கு 30 வயதுதான் ஆகிறது..

 விபச்சாரம்

விபச்சாரம்

ஆனால், விபச்சாரத்தில் பல வருடங்களாகவே ஈடுபட்டு வந்துள்ளார்.. எத்தனையோ அப்பாவி பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்... இதைதவிர, வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்தும் விற்பனை செய்து வந்துள்ளார்.. டாஸ்மாக்கில் இருந்து , மது வகைகள் பீர் வகைகளை வாங்கிக் கொண்டு வந்து, கடை மூடியிருக்கும் சமயங்களில் தன்னுடைய வீட்டில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்... அதனால் எல்லா நேரமும் லோகேஸ்வரி வீட்டில் மதுபானங்கள் கிடைக்குமாம்..

 பகை + குறி

பகை + குறி

இளைஞர்களை குறி வைத்து, இந்த மதுபானங்களை கள்ளத்தனமாக விற்று வந்துள்ளார் லோகேஸ்வரி.. இதனால், அந்த பகுதி இளைஞர்கள் பலர், காலை முதலே குடிபோதைக்கு அடிமையாகிவிட்டார்களாம்.. இதனால், வருத்தப்பட்ட சதீஷ், சோமங்கலம் போலீசுக்கு பலமுறை தகவல் தந்திருக்கிறார்.. இளைஞர்கள் யாரும் சீரழியாமல் காப்பாற்றிவிட வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருந்துள்ளார்.. இதுதான் லோகேஸ்வரிக்கும் சதீஷூக்கும் பல மாதங்களாகவே பகையை வளர்த்து வந்துள்ளது.

 லோகேஷ்வரி

லோகேஷ்வரி

கடந்த 3 நாட்களுக்கு முன்பே, எஸ்தர், சதீஷை தன் வீட்டிற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினாராம்.. ஆனால் சமாதானமாகாத சதீஷ் கோபமாக வெளியே சென்றுவிட்டாராம்.. அதனால், நேற்று மதியம் மறுபடியும் சதீஷை வீட்டிற்கு லோகேஸ்வரி வரவழைத்துள்ளார்... அப்போது, வீட்டிற்குள்ளேயே நிறைய அடியாட்களை முன்கூட்டியே வரவழைத்திருந்ததாகவும் தெரிகிறது.. இவர்களை எல்லாம் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தில் சதீஷ் உறவினர்கள் இன்னொன்றையும் சொல்கிறார்கள்..

 வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

ஏற்கனவே ஒருமுறை லோகேஷ்வரியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது, "நீ மதுபாட்டில் விற்பனை செய்வதை சதீஷ் தான் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தந்து வருகிறார்.. அவரிடம் பேசி சமாதானமாக சென்றால்தான் நீ மதுபானம் விற்க முடியும் என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது சதீஷ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்... இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. போலீசார் தான் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+