திறந்தவெளி மைதானம் டூ தனியார் மண்டபம்.. பரந்தூர் மக்களை விஜய் சந்திக்கும் இடம் மாறியது ஏன்?
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு திறந்தவெளி மைதானத்தில் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தனியார் மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 900 நாட்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் வாழ்விடத்தை இழக்கும் மக்களுக்கு சந்தையை விடவும் இரு மடங்கு இழப்பீடு அளிக்கப்படும் என்றும், அவர்களின் மறுகுடியமர்த்தலுக்கு பின் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படும் என்று தமிழக அரசு தொடர்ச்சியாக உறுதி அளித்து வருகிறது. அதேபோல் பரந்தூர் விமான நிலையத்தால் நீர் நிலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், நாளை பரந்தூர் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இதுதொடர்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதேபோல் பரந்தூரில் தவெக நிர்வாகிகள் ஆய்வு நடத்தி இருக்கின்றனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஒருமுறை ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலுக்கு வந்த பின் நடிகர் விஜய் முதல்முறையாக மக்களை நேரடியாக சென்று சந்திக்க உள்ளார். இதனால் இந்த சந்திப்பு மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதனிடையே பரந்தூர் மக்களையும், போராட்டக் குழுவையும் திறந்தவெளி மைதானத்தில் தான் விஜய் சந்தித்து ஆலோசித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மக்களையும், போராட்டக் குழுவையும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் காவல்துறையினர் மீது குற்றம்சாட்ட தொடங்கினர்.
ஆனால் மக்களையும், போராட்டக் குழுவையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்தவெளி மைதானம் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கியது தெரிய வந்துள்ளது. காவல்துறை தரப்பில் எங்கு சந்திக்கப் போகிறீர்கள் என்று தவெக நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 2 இடங்களையும் முன்பே தேர்வு செய்து கொடுத்துள்ளனர். காவல்துறையினரிடம் சொன்ன 2 இடங்களில், ஒன்று திறந்தவெளி மைதானமும், மற்றொன்று திருமண மண்டபமும் ஆகும்.
தற்போது காலி மைதானத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், சந்திப்பை தனியார் திருமண மண்டபத்திற்கு சந்திப்பை மாற்றியுள்ளனர். இன்றும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், தவெக நிர்வாகிகள் சந்திப்பை திருமண மண்டபத்திற்கு மாற்றியதும் தெரிய வந்துள்ளது. மேலும் பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் வரும் போது அக்கட்சியின் மற்ற மாவட்ட தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!












Click it and Unblock the Notifications