கணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: 3வது திருமணம் செய்துகொண்ட தனது கணவரை மீட்டு தரக்கோரி மாமியார் வீட்டு வாசலில் தன் மகனுடன் பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Recommended Video

    கணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா - வீடியோ

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியை சேர்ந்தவர் மேரி வயது 33. இவரும் அதே பகுதியை சேர்ந்த இயேசுதாஸ் வயது 40 என்பவரும் 14 வருடங்களுக்கு முன்பாக காதலித்து வந்ததாகவும் அப்போது இயேசுதாஸ் மேரியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏசுதாஸ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    Wife seeks redemption of her husband who done third marriage at kanchipuram

    இது குறித்து மேரி ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்நிலையில் காவல் நிலையத்திற்கு இரண்டாவது மனைவியுடன் ஜேசுதாஸ் வந்துள்ளார். அப்பொழுது ஜேசுதாஸ் மேரியை ஏமாற்றிய விஷயத்தை கேள்விப்பட்ட ஜேசுதாசின் இரண்டாவது மனைவி விவாகரத்து வாங்கி சென்று விட்டார்.

    இந்நிலையில் மேரியை ஊர் பொதுமக்கள் மற்றும் நெமிலியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஜேசுதாஸ் திருமணம் செய்துகொண்டார். பின்னர் மனைவிக்கு குழந்தை பிறந்தவுடன் ஜேசுதாஸ் தலைமறைவாகியுள்ளார். உடனே காவல் நிலையத்தில் ஜேசுதாஸ் மீது புகார் அளித்து இது சம்பந்தமான வழக்கு தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் மேரிக்கு பிறந்த குழந்தை என்னுடையது அல்ல என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் இயேசுதாஸையும் மேரிக்கு பிறந்த குழந்தையையும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு மேலாக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தாமதித்தும் குழந்தையை அலைகழித்து வந்த இயேசுதாஸை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. இதன் பிறகு, டிஎன்ஏ டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. இதில் மேரியின் குழந்தை ஏசுதாஸுக்கு பிறந்தது தான் என்பது உறுதியானது.

    இந்நிலையில் நீதிமன்றம் மாதம் மாதம் குழந்தைக்கு 5,000 ரூபாய் மற்றும் படிப்பு செலவு அளிக்க வேண்டும் என்று இயேசுதாஸ் இடம் கூறியிருந்தது. ஆனால் யேசுதாஸ் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் குழந்தைக்கு சேர வேண்டிய பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில், இவரின் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, 'நான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அதனால் நான் இந்த குழந்தையை பார்க்க முடியாது. நீ என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள். உன்னால் என்னை எதுவும் பண்ண முடியாது' என்று உதாசீனப்படுத்தியதாக மேரி கூறியுள்ளார். ஆகவே மன உளைச்சல் அடைந்த மேரி இயேசுதாஸ் எங்கே குடியிருக்கிறார் என்று தெரியாததால், ஸ்ரீபெரும்புதூர் கம்பர் தெருவில் உள்ள யேசுதாஸின் தாயார் பாத்திமா வீட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+