பாத்ரூமில் இளம் பெண் சடலம்.. கழுத்தில் காயம்.. அடக்கம் செய்ய முயன்ற அப்பா.. அதிர வைத்த காஞ்சிபுரம்
மகளை கொன்ற தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டார்
காஞ்சிபுரம்: பாத்ரூமில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது.. அவரது கழுத்தில் காயங்கள் கிடந்தன.. அவசர அவசரமாக மகளின் சடலத்தை ரகசியமாக அடக்கம் செய்ய முயன்ற, அப்பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வெங்கடய்யாபிள்ளை தெருவில் வசிப்பவர் பாலாஜி... இவர் உத்திரமேரூர் தீயணைப்பு ஆபீசில் வேலை பார்த்து வருபவர்.. பல்வேறு வரலாற்று கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருபவர். இவர் மனைவி ஜெயந்தி.. மகள் பெயர் செந்தாரகை. 23 வயதாகிறது.
கடந்த மே 24ம் தேதி யுவராஜ் என்பவருக்கும் செந்தாமரைக்கும் எளிய முறையில் கல்யாணம் நடந்தது.. இதையடுத்து வண்டலூர் பகுதியில் புதுமண தம்பதிகள் வசித்து வந்தனர்.

மர்ம மரணம்
ஜுன் மாத கடைசியில் லாக்டவுன் போடப்படவும், செந்தாரகை அம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.. பிறகு கடந்த 8-ம் தேதி பாத்ரூமில் மர்மமான முறையில் இவர் இறந்து கிடந்தார்.. எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டதை குறித்து பெற்றோர் போலீசில் எந்த தகவலையும் சொல்லவில்லை.. புகாரும் தெரிவிக்கவில்லை.

ரகசிய அடக்கம்?
யாருக்கும் தெரியாமல் உடலை ரகசியமாக புதைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விஷயம் எப்படியோ போலீசாரின் காதுகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து செந்தாரகையின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இதற்கு பிறகுதான் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.

செந்தாரகை
இதை கேட்டு பதறி கொண்டு வந்த செந்தாரகையின் உறவினர்கள், சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசில் புகார் தந்தனர்.. 2 மாசத்தில் செந்தாரகை இறந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணையும் ஆரம்பமானது. செந்தாரகை இறந்தது தன்னுடைய அம்மா வீடு என்பதாலும், இறந்த சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகமும் எழுந்தபடியே இருந்தது.

காயங்கள்
தற்போது, செந்தாரகையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது.. அவரது கழுத்து பகுதியில் காயம் உள்ளதாம்.. கழுத்து நெரிக்கப்பட்டுதான் உயிர் பிரிந்திருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.. இதையடுத்து, மதுராந்தகம் எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் செந்தாராகையின் அப்பா பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர்.. இப்போதைக்கு அவர் சிறையில் உள்ளார். வரும் திங்கட்கிழமை கோர்ட்டில் பாலாஜியை விசாரணை செய்ய கோர்ட்டில் அனுமதி வாங்க போகிறார்கள்.

தற்கொலை
அதன்பிறகு நடக்க போகும் விசாரணையில்தான் மகளை அப்பா ஏன் கொன்றார், அதுவும் பாத்ரூமில் ஏன் மகள் சடலமாக கிடந்தார் என்ற விவரங்கள் தெரியவரும். கல்யாணத்துக்கு முன்பே ஒருவரை செந்தாரகை விரும்பினார் என்றும், கல்யாணம் ஆனதில் இருந்தே சோகமாக இருந்ததாகவும், அதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்பட்டது.. ஆனால், தற்போது வந்துள்ள, செந்தாரகையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உத்தரமேரூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications