முதலிரவு.. ஆசை ஆசையாக ரூமுக்குள் நுழைந்த மாப்பிள்ளை.. கண்ட காட்சி.. அப்படியே ஷாக்.. அதிர வைத்த பெண்!
17 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம் செய்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கன்னியாகுமரி: ஆசை ஆசையாக முதலிரவுக்கு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை.. அங்கே கண்ட காட்சியை கண்டு அப்படியே உறைந்து நின்றுவிட்டார்!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஒரு சிறுமி கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார்.. அவருக்கு வயசு 17 ஆகிறது.. இவர் சுதீஷ் என்ற இளைஞரை காதலித்தார்.
காலேஜ் செல்லும் வழியில்தான் சுதீஷ் கடை வைத்திருக்கிறார்.. அதனால் பழக்கம் ஏற்பட்டு, காதலாக உருவானது.. இந்த சமயத்தில் லாக்டவுன் போட்டுவிடவும் காலேஜ் மூடப்பட்டது.. சிறுமியும் வீட்டிலேயே இருந்து வந்தநிலையில், காதலர்கள் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தனர்.

அதிர்ச்சி
எப்போதுவுமே மகள் செல்போனில் இருப்பதை பார்த்ததும் பெற்றோருக்கு சந்தேகம் வந்தது.. அப்போதுதான் லவ் மேட்டர் வீட்டிற்கு தெரிந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளுக்கு 17 வயசு என்றும் பார்க்கவில்லை, லாக்டவுன் என்றும் பார்க்கவில்லை. டக்குனு சொந்த சாதியில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்தனர். காதும் காதும் வெச்ச மாதிரி 2 வீட்டினர் மட்டுமே கலந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே அந்த கல்யாணத்தை நடத்தியும் முடித்தனர்.. மணமக்களுக்கு முதலிரவுக்கும் தயார் செய்தனர்.

கல்யாணம்
ஏகப்பட்ட கனவுகளுடன் முதலிரவு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை.. அங்கே மனைவி காதலன் சுதீஷூடன் பேசிக் கொண்டிருந்தார்.. யார், என்ன என்று அதை பற்றி கேட்டபோது, சிறுமி அனைத்தையும் சொல்லிவிட்டார்.. தனக்கு பிடிக்காமல் இந்த கல்யாணத்தை கட்டாயப்படுத்தி செய்து வைத்துவிட்டனர் என்று சொல்லவும் மாப்பிள்ளை ஷாக் ஆகி நின்றார். சிறுமி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிடவும் அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் மாப்பிள்ளை.

போலீஸ்
அவர் சென்ற உடனேயே சிறுமி, சுதீஷை வீட்டுக்கு வரும்படி சொல்லி உள்ளார்.. உடனே சுதீஷூம் அந்த ராத்திரி நேரத்திலேயே சிறுமியின் வீட்டு சுவர் ஏறி குதித்து வந்துள்ளார்.. இதை சிறுமியின் தந்தை பார்த்துவிட்டு "உனக்கு இங்கே என்ன வேலை?" என்று கேட்டதற்கு, "உங்க மகள்தான் என்னை வர சொன்னது" என்று சுதீஷ் சொன்னார். அத்துடன் அங்கிருந்து கிளம்பி போக முடியாது என்றும் உறுதியாக சொல்லவும் கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றது.

மாப்பிள்ளை
இதனால் போலீசார் சுதீஷை தாக்கி உள்ளனர்.. இதை பார்த்த பதறிய சிறுமி, காதலனை காப்பாற்றுவதற்காக தனக்கு 17 வயதே ஆவதால் கட்டாயப்படுத்தி வீட்டில் திருமணம் செய்துவிட்டதாக போலீசில் சொன்னார்... இந்த விஷயம் போலீசுக்கே ஷாக்காக இருந்தது.. இதற்கு பிறகுதான் சிறுமியின் பெற்றோர், மாப்பிள்ளை, மணமகன் வீட்டார் என அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு பதிவு
ஆனால் அதற்குள் குடும்பத்தில் இருந்த மொத்த பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.. அவர்கள் 6 பேரையும் தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்... அதேபோல, காதலனுடன் எப்படியும் தன்னை அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று நம்பி பெற்றோரையே போலீசில் சிக்க வைத்தும், சிறுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. இப்போது கணவனும் இல்லை.. காதலனும் இல்லாமல் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications