Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூமெல்லாம் "ஆணுறை".. மொட்டை மாடியில் சிக்கிய "பிஞ்சுகள்".. கதறும் தோழிகள்.. வெளியான 2 ஆடியோ.. பகீர்

குளச்சல் பங்களாவில் நடந்த படுக்கை பகிர்வு தகவல், மற்றும் 2 ஆடியோ வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மொட்டை மாடியில் நடந்த பர்ட்டே பார்ட்டி மற்றும் படுக்கை பகிர்வுகள் குறித்த தகவல்கள் கூடுதலாக வெளியாகி உள்ள நிலையில், இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த மாணவர் பெயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயதுகூட இன்னும் இவருக்கு முடியவில்லை.

குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர்கள் 2 பேருமே 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர்..

 பைக் நண்பர்கள்

பைக் நண்பர்கள்

ஆனால், ரம்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.. நிறைய ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்த நிலையில், விக்ரமுக்கு இது மிகுந்த மனஉளைச்சலை தந்து வந்துள்ளது.. ரம்யாவை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இந்த சமயத்தில்தான், ரம்யா தன் பிறந்தநாளுக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி தருவதாக, விக்ரமுக்கு தகவல் கிடைத்தது.. அங்கு சென்று பார்த்தால், ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அனைவருமே அரைகுறை ஆடையில், மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்துள்ளனர்.

ஆணுறை

ஆணுறை

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த விக்ரம், ரம்யாவை அங்கேயே தாக்கி உள்ளார்.. இதற்கு பிறகு, ரம்யாவின் பெற்றோர் போலீசில் சொல்லவும், பர்த்டே பார்ட்டி நடந்த சம்பந்தப்பட்ட பங்களாவின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோதுதான், கிழித்து வீசப்பட்ட டிரஸ்கள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், ஸ்நேக்ஸ், ஆணுறைகள், என சிதறிக்கிடந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.. வீட்டிற்குள்ளும் நிறைய மதுபாடில்கள், ஆணுறைகள் இருந்திருக்கின்றன.. இதற்கு பிறகு விசாரணை நடத்தியபோதுதான், பாலியல் அட்டூழியங்கள் அங்கு அரங்கேறியிருந்தை போலீசார் கண்டறிந்தனர்.

தென்னை

தென்னை

பங்களா, குளச்சலில் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ளதாக தெரிகிறது.. இது ரம்யாவின் பெரியப்பாவுக்கு சொந்தமான பண்ணை வீடு என்கிறார்கள்.. இரவு நேரங்களில், விக்ரமுக்கு தெரியாமல், இந்த பங்களா வீட்டிற்கு, ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து தருவாராம் ரம்யா.. இதில் ரம்யா மீதான புகார்களை தோழிகளே கண்ணீருடன் சொல்கிறார்களாம்.. தண்ணி அடிக்க வேண்டும், கஞ்சா பிடிக்க வேண்டும், ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கு வேண்டும் என்பதற்காகவே அந்த பங்களாவை பயன்படுத்தி வந்திருக்கிறாராம்.. ஆனால், அந்த பங்களாவுக்கு மது குடிக்கவும், சிகரெட் பிடிக்கவும் தோழிகளை கூப்பிடுவாராம்..

"ஜாய்ன்ட்"

இதற்கு ஆசைப்பட்டு வரும் தோழிகளுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்குமாம்.. காரணம், ஏற்கனவே, அங்கு ஆண் நண்பர்களை வரவழைத்திருப்பாராம் ரம்யா. இது யார்? என்று ஆண் நண்பர்களை பற்றி தோழிகள் கேட்கும்போது, "இவர்கள்தான் நமக்கு சரக்கு ஏற்பாடு செய்கிறவர்கள்" என்று சொல்லி அறிமுகப்படுத்துவாராம். பிறகு எல்லாருமே சேர்ந்து தண்ணி அடித்து முடித்தபிறகு, ரம்யா அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பாராம்.. பிறகு, தன்னுடைய தோழிகளுக்கும் அந்த ஆசையை தூண்டுவாராம்.. பிறகு, அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும்படியும் தோழிகளிடம் சொல்வாராம்... இப்படி அடிக்கடி அந்த பங்களாவில் நடந்துவந்திருக்கிறது. இதுக்கு பெயர்தான் "ஜாயிண்ட்" (படுக்கை பகிர்வு) என்கிறார்கள்.

 வண்டவாளங்கள்

வண்டவாளங்கள்

ஆனால், நடந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல், விக்ரம் தன் மகளை கொடூரமாக தாக்கிவிட்டார் என்று போலீசில் புகார் தந்துவிட்டனர் ரம்யாவின் தாய்.. போலீசார்தான் ரம்யாவின் வண்டவாளங்களை வெளியே கொண்டுவந்துள்ளனர்.. இதனிடையே, விக்ரமின் அம்மா, ரம்யாவால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தன்னுடைய மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் கூறிவருகிறார். இதைக்கேட்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் கதிகலங்கி உள்ளனராம்.. அதில் ஒரு மாணவி, விக்ரமின் அம்மாவுக்கு போனை போட்டு அழுதுள்ளார்.. அந்த வாய்ஸ் மெசேஜ் ஆடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கதறி அழுத பெண்

கதறி அழுத பெண்

"அம்மா, அன்னைக்கு என்ன நடந்ததுன்னா, எனக்கு கால் பண்ணி கூப்பிட்டாங்கம்மா.. செவ்வாய்க்கிழமை நைட் 7 மணிக்கு போன் பண்ணிட்டே இருந்தாங்க.. மது விருந்துக்குதான் என்னை கூப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியும்... அதனால், வரமாட்டேன் என்று முதலில் சொன்னேன்.. அதுக்கப்பறம்தான் கட்டாயப்படுத்தி கூப்பிடவும் போய்விட்டேன்.. ஒரே ஒருமுறை தப்பு செஞ்சுட்டேன்..,,இனிமேல் அந்த தவறை செய்யக்கூடாது என்பதற்காகத்தான், அவங்க எனக்கு தொடர்ந்து கால் பண்ணியும் அந்த போனை எடுக்கவே இல்லை.. என் வீட்டில் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.ம்மா.." என்று கெஞ்சி அழுகிறார்.

 ஜாயிண்ட்

ஜாயிண்ட்

இதையடுத்து, போலீசில் இந்த ஆடியோவை தந்துள்ளார் விக்ரமின் தாய்.. அப்போது போலீசாரிடம் தன் மகனுக்கு என்ன ஆனது என்பது குறித்தும், விக்ரமின் அம்மா போலீஸாரிடம் பேசியுள்ளார்.. அந்த ஆடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.. அதில், "அந்த ரம்யா என்ற பொண்ணும், என் புள்ளையும் 6 வருஷமா லவ் பண்ணிட்டு இருக்காங்க.. இந்த மே 24-ம் தேதி, ரம்யாவுக்கு வேற பையனுடன் பழக்கமாகி இருக்கு.. அதனால் என் பையனை ஒதுக்கிட்டாள் ரம்யா.. அது என் பையனுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.. அதனால் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுட்டான்..

மெசேஜ்

மெசேஜ்

9 நாளாக செயற்கை சுவாசத்தில்தான் ஆஸ்பத்திரியில் இருந்தான்.. 13 நாள் அந்த ஆஸ்பத்திரியில் அவனை வெச்சிருந்தோம்.. அதுக்கப்பறமும் அந்த பொண்ணு என் பையனுக்கு மெசேஜ் அனுப்பி.. என்னை நம்பாதேடா.. வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா.. என்னை மாதிரி நீயும் வாழ்க்கையை என்ஜாய் பண்ண பழகிக்கோ" என்று மெசேஜ் பண்ணாள். என் பையன் செல்போன் லாக்கில் இருந்தது.. நானும் என் பொண்ணும்தான் அவனுக்கே தெரியாம, அந்த மெசேஜை படிச்சிட்டோம்.. அதுக்கு என் பையன், ரம்யாவுக்கு பதில் மெசேஜ் அனுப்பறான்..

 என்ஜாய்

என்ஜாய்

"நீ எத்தனை பேர்கிட்ட பழகினாலும் உன்னை என்னால் மறக்கவே முடியாது.. உன்னை அந்த அளவுக்கு லவ் பண்றேன்.. நீ எனக்கு கண்டிப்பா வேணும்.. உன் மேல உயிரா இருக்கேன்.. நீ தவறு பண்ணால்கூட, அந்த தவறு எனக்கு பெரிசா தெரியாது.. மன்னிச்சுடறேன்.. நீ இல்லன்னா எனக்கு வாழ்க்கை இல்லை"ன்னு என் பையன் மெசேஜ் அனுப்பியிருக்கான். அதுக்கு அந்த புள்ளை இன்னொரு மெசேஜ் இவனுக்கு போடுது, "தேவையில்லாம நீ என்னை நம்பியிருந்து, உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே.. என்ஜாய் பண்ணுடா.. நான் எப்படி என்ஜாய் பண்றேன்" அப்படின்னு அந்த மெசேஜ் பண்ணியிருக்கா..

 பெட் ஷேரிங்

பெட் ஷேரிங்

இவங்க 2 பேரும் மாத்தி மாத்தி அனுப்பிக்கிட்ட மெசேஜ்கள், எல்லாம் இன்னமும் என்கிட்ட இருக்கு.. இந்த கும்பலுக்கு ஆகாஷ் என்ற பையன்தான் லீடர் மாதிரி.. ஆல்வியா, ஸ்ருதி, இவங்க எல்லாம் ஒன்னா அந்த பங்களாவில் சேருவாங்களாம்.. அப்படி சேரும்போது, ஒருநாள் ரம்யாகிட்ட கேட்டாங்களாம், உனக்கென்ன விக்ரம்கூட சண்டையான்னு கேட்டிருக்காங்க.. ஆமா சண்டைதான், அதெல்லாம் பேசி சால்வ் பண்ணிக்குவேன்.. என்று சமாளித்து, அந்த பிரச்சனையை அப்பவே ஓரங்கட்டிட்டாள். ரம்யா வீட்டு தரப்பில் புகார்களை என் பையன் மேல் தந்தால், நானும் என்கிட்ட இருக்கிற ஆதாரங்களை வெளியே விடுவேன்.. இதனால் அவங்க பொண்ணுக்குதான் அசிங்கம்.." என்று விக்ரமின் அம்மா பேசுகிறார்.

 லீக் ஆடியோ

லீக் ஆடியோ


பாதிக்கப்பட்ட பெண், விக்ரமின் அம்மாவிடம் கெஞ்சும் ஆடியோவும், விக்ரமின் அம்மா போலீசாரிடம் பேசும் ஆடியோவும், தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படைக்கு மாவட்ட எஸ்பி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பார்ட்டியில் கலந்துகொள்ள மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+