ஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்
6 பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது
Recommended Video
குமரி: ஆட்டோவில் வந்து.. எஸ்ஐ வில்சனை கொன்றுவிட்டு சாவகாசமாக நடந்து சென்று.. அதற்குபிறகு நின்று கொண்டிருந்த காரில் ஏறி தப்பி உள்ளனர் 2 பயங்கரவாதிகளும்.. இவர்கள் பாஜக பிரமுகர் கொலை, உட்பட பல கிரிமினல் வழக்கில் கைதாகி, ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்தவர்கள் என்ற அதிர்ச்சி மற்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
களியக்காவிளை செக் போஸ்ட்டில் கடந்த 8-ந்தேதி இரவு 9.45 மணிக்கு பணியில் இருந்த எஸ்ஐ வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. முதல் கட்டமாக செக்பாஸ்ட் அருகே சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பேர் எதிரே இருக்கும் பள்ளி வாசல் வழியாக நுழைந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர்களின் வீடியோவை போலீசார் வெளியிட்டனர். அவர்கள் கேரளாவுக்கு தப்பி உள்ள தகவல் கிடைத்ததால், இதை பற்றின தகவல்களை அங்கு அனுப்பினர்.

பயங்கரவாதிகள்
பிறகு, கேரள போலீசார், சிசிடிவி வீடியோவை பார்த்து, அந்த நபர்கள் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர்தான் என்று தெரிவித்ததுடன், அவர்களின் போட்டோக்களையும் வெளியிட்டனர். 2 பேருமே குமரியை சேர்ந்தவர்களாம்.. இவர்கள் குமரி மாவட்ட பாஜக தலைவர் எம்ஆர் காந்தி தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களும் கூட.. அது மட்டுமல்ல.. திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் கைதானவர்கள்.. இப்போது இவர்கள் ஜாமீனில் வந்து தலைமறைவாகி இருக்கிறார்களாம்.

போஸ்டர்கள்
இந்த 2 பேரையும் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. இவர்களின் படங்கள் அச்சடித்து போஸ்டர்களாக பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் ஒட்டப்பட்டன.. கேரள - தமிழக 2 மாநில போலீசாருமே இவர்களை தேடி வந்தனர்.. இவர்கள் பற்றின துப்பு தந்தால் 2 லட்சம் என கன்னியாகுமரி போலீசும், 5 லட்சம் என கேரள போலீசும் அறிவித்துள்ளன.

பெட்டிக்கடை
இந்த சமயத்தில்தான் பாலக்காடு பகுதியில் கோவையை சேர்ந்த 2 பேர் சிக்கினர்.. ஒருத்தர் வெல்டிங் தொழில் பார்க்கிறார், இன்னொருத்தர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இவர்களுடன் பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபீக் இருவருமே அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.. அதனால் இவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அதேபோல நெல்லையை சேர்ந்த ஒருவர் பூத்துறையில் பிடிபட்டார். இவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துள்ளனர்.

களியக்காவிளை
வில்சனை கொன்ற அன்று, பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோருடன் மேலும் 2 பேர் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் எல்லோருமே நாகையில் இருந்து ஒரு காரில் களியக்காவிளை வந்துள்ளனர். செக் போஸ்ட்டுக்கு முன்பேயே காரில் இருந்து தவுபீக்கும், அப்துல் சமீமும் இறங்கி கொண்டனர். அவர்களை இறக்கி விட்ட கார், இஞ்சிவிளை நோக்கி சென்று ஓரிடத்தில் நின்று கொண்டது.

சிசிடிவி காமிரா
காரில் இருந்து இறங்கிய 2 பேரும் ஒரு ஆட்டோவில் ஏறி செக்போஸ்ட்டுக்கு சென்றுள்ளனர்.. அங்கு வில்சனை கொன்றுவிட்டு.. சாவகாசமாக நடந்து.. இஞ்சிவிளையில் நின்று கொண்டிருந்த காரில் ஏறி சென்றுள்ளனர். இவ்வளவும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. பயங்கரவாதிகளுடன் இருந்த அந்த 2 பேர் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை
பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 6 பேர் இப்போதைக்கு சந்தேகத்தில் உள்ளதால், அவர்களிடம் ரகசிய விசாரணை நடக்கிறது. அதனால் வில்சனை கொன்ற 2 பேரும் விரைவில் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications