கன்னியாகுமரி அருகே நடந்து போன 40 வயது பெண்.. பின்னாடியே வந்த 25 வயது இளைஞன்.. ஆடிப்போன பொதுமக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 40 வயது பெண், அந்த பகுதியின் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கவின் என்ற இளைஞர் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 40 வயது பெண்,அந்த பகுதியின் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வேலைக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பரமன்விளையை சேர்ந்த கவின் (25) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளார்கள். அதற்குள் கவின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து அந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கவினை போலீசார் கைது செய்தனர்.
பேக்கரியில் பலகாரம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பேக்கரிக்கு பலகாரம் செய்தபோது கொதிக்கும் எண்ணெய் உடலில் கொட்டியதால் தொழிலாளி உயிரிழந்தார். நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளையை சேர்ந்த 43 வயதாகும் ராம்குமார் என்பவர் தொழிலாளியாவார். இவருக்கு முத்துராணி என்ற மனைவி இருக்கிறார்.
ராம்குமார் மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் பலகாரம் செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த அன்று ராம்குமார் பேக்கரி உரிமையாளரின் வீட்டில் வைத்து பலகாரங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் எண்ணெய் கொதித்து கொண்டிருந்த பாத்திரத்தை ராம்குமார் தூக்கினாராம்.. அப்போது திடீரென கை தவறி பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெய் ராம்குமாரின் கழுத்துக்கு கீழே கொட்டிவிட்டது.
உடலில் எண்ணெய் கொட்டியதால் வலி தாங்க முடியாமல் ராம்குமார் துடிதுடித்து அலறியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications