தங்கம் போல் மதிப்பான பொருள்.. கன்னியாகுமரி மளிகை கடையில் திருடியவருக்கு மறக்க முடியாத பரிசு
கன்னியாகுமரி: பணம், நகை திருடியவர்கள் கூட எளிதாக எஸ்கேப் ஆகி ஜாலியாக இருக்கிறார்கள். ஒரு வெங்காய மூட்டையை ஆள் இல்லாத கடையில் தூக்கியவர், அந்த வெங்காயத்தால் கண்ணீரில் மிதக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சின்ன வெங்காயத்தை திருடிய நபருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பலரும் சின்ன சின்ன திருட்டுகளை கண்டு கொள்ள மாட்டார்கள். நாம் ஜாலியாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு 5000, 10000, 2000 என திருடப்பட்டிருந்தால், அதற்காக காவல் நிலையம் போய் எப்ஐஆர் போட்டு, அதனை விசாரித்து, தனிப்படை அமைத்து திருடனை பிடிப்பது என்பது அதனைவிட செலவு பிடிக்கும் வேலை என்பதுடன், தினமும் வழக்கிற்காக நடையாய் நடக்க வேண்டும். இதனால் சிறிய திருட்டுகளை பெரிய அளவில் மக்கள் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பது இல்லை.. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தான், கூகுள் பே, போன் பேயில் பணம் ஏமாற்றுபவர்கள் சுற்றுகிறார்கள். அதேபோல் தான் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை திருடியவர்கள் கூட சுற்றுகிறார்கள்.

ஆனால் கன்னியாகுமரியில் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. திருட்டுத்தனமாக வெங்காயத்தை திருடி சென்றவர் இன்று சிறையில் கம்பி எண்ணுகிறார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியை சேர்ந்த 49 வயதாகும் பாஸ்கர் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிட சென்று விட்டு திரும்ப கடைக்கு வந்துள்ளார்.
அப்போது கடையின் வெளியே இருந்த ஒரு மூட்டை சின்ன வெங்காயம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். ஒரு மர்ம ஆசாமி கடைக்கு வருகிறார். அங்கு கடை ஊழியரிடம் ஏதோ பேசுகிறார். பின்னர் கடையின் உரிமையாளர் இல்லை என்பதை அறிந்து கொள்கிறார். சிறிது நேரம் நோட்டமிட்ட அவர் நைசாக வெங்காய மூட்டையை தூக்கிக் கொண்டு ஸ்கூட்டரில் வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி செல்கிறார்.. இப்படியாக சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகியிருந்தது.
வெங்காய மூட்டையையும் திருடிய சிசிடிவி காட்சிகளை பார்த்து நொந்து போன வியாபாரி இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் வழக்குப்பதிவு செய்து கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், ஸ்கூட்டரின் எண்ணும், ஆசாமியின் உருவமும் தெளிவாக தெரிந்தது. இதனை வைத்து விசாரித்ததில், வடக்கு நுள்ளிவிளை பகுதியை சேர்ந்த 52 வயதாகும் தனபால் என்பவர் வெங்காய மூட்டையை திருடியது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80-க்கு விற்பனையாகும் நிலையில், 25 கிலோ மூட்டை சுமார் ரூ.2 ஆயிரம் ஆகும். சின்ன வெங்காயம் விலை அதிகமாக உள்ளதால் அதனை திருடி லாபம் சம்பாதிக்க நினைத்தவர் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications