பயிற்சி டாக்டர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. சென்னைக்கு தனிப்படை விரைவு.. மாணவி வழக்கில் திருப்பம்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி மரணம் விவகாரத்தில் 3 டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பயிற்சி டாக்டரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் சுஜிர்தா முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே டாக்டர் சுஜிர்தாவின் தந்தை சிவகுமார், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி சுஜிர்தாவின் அறையில் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் 3 டாக்டர்களின் பெயர்களை அவர்கள் எழுதி, அவர்கள் மீது பகீர் குற்றச்சாட்டுகளை சுர்ஜிதா கூறியிருக்கிறார். இதன்படி கல்லூரியின் போராசிரியர் டாக்டர் பரமசிவம், பாலியல் தொந்தரவு செய்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொந்தரவு செய்தாராம்.
இதேபோல் 3ம் ஆண்டு படித்து வரும் முதுகலை பயிற்சி டாக்டர்கள் ஷரிஷ், பிரித்தி ஆகியோரும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் டாக்டர் சுர்ஜிதா கூறியுள்ளார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.
இதனிடைய ஏடிஎஸ்பி மதியழகன், தக்கலை டிஎஸ்பி உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் ஆகியோர் குறிப்பிட்ட மருத்துவ கல்லூரிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர் இதனிடையே புகார் கூறப்பட்டுள்ள பயிற்சி டாக்டர் ஹரிஸ், இங்கு இல்லை என்பதும் அவர் தனது சொந்த ஊரான சென்னையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் எனறு வந்துள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சென்னை சென்றுள்ளனர். இது ஒருபுறம் எனில் பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் பிரித்தி ஆகியோரிடம் போலீசாரிடம் மாணவி சுஜிர்தா மரணம் தொடர்பாக துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கல்லூரிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவி செல்போன் மூலம் யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகிறார். இதனிடையே மாணவி மரணம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் யாராவது தகவல் தெரிவிக்க விரும்பினால் 9498195077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications