கன்னியாகுமரி விடுதியில் மது விருந்து.. நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் போதையில் தள்ளாடிய இளம்பெண்
கன்னியாகுமரி: இன்றைக்கு குடிபோதைக்கு இளைஞர்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் அடிமையாகி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மதுக்கடைக்கு போனால் அவமானம் என்ற மனநிலை இருந்தது. ஆனால் டாஸ்மாக்கில் அந்த நிலையில் அடியோடு மாறிவிட்டது. சர்வ சாதாரணமாக பலர் குடிக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் நிதானத்தை இழந்து இளம்பெண் தள்ளாடியதை பார்த்து பலரும் வாயடைந்து போனார்கள்.
டாஸ்மாக் காலை 12 மணிக்கு தான் ஓபன் ஆகிறது. தனியார் மதுக்கடைகள் 11 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே வாங்குவதற்கு பல குடிமகன்கள் அலைமோதுகிறார்கள். கள்ளத்தனமாக காலையிலேயே வாங்கி குடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். குடிபோதை என்பது அவமானமாக பார்க்கப்பட்டது. அசிங்கமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை.. 18 வயது சிறுவன் முதல் 70 வயது முதியவர் வரை பலரும் குடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு கோடி மதுபாட்டில்கள் தினமும் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் சராசரியாக ஒரு கோடி பேர் மது அருந்துவாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள 5ல் ஒருவர் மது அருந்துவதாக கூறப்படுகிறது. ஆண்கள் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் பார்த்தால் 3ல் ஒருவர் குடிப்பதாக நிலைமை மாறி உள்ளதாகவும் புள்ளி விவரங்களில் கூறப்படுகிறது.
பலர் குடிநோயாளிகளாக மாறிவிட்டார்கள். அவர்கள் வாழ்வாதாரம் மதுவிற்காக அதிக பணம் செலவு செய்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் வறுமையில் இருப்பதற்கு முக்கியமான காரணம், மதுவிற்காக பணம் செலவு செய்வது தான். அதேபோல் மதுபோதை அதிகமாகும் காரணத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்குகிறார்கள். தொடர்ந்து மது அருந்துபவர்கள் விரைவில் உடல் நலம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், மதுபோதையில் ஆண்கள் தள்ளாடுவதை பலர் பார்த்திருப்பார்கள்.. ஆனால் இப்போது பெண்களும் மதுவுக்கு அடிமையாகி தள்ளாடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் பேருந்து நேற்று காலை ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து 2 இளம்பெண்கள் இறங்கினர். இருவருக்கும் வயது 25-க்குள் இருக்கும். ஒரு இளம்பெண் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டும், மற்றொரு பெண் ரோஸ் கலர் சுடிதாரும் அணிந்திருந்தார்கள்.
அதில் டி-ஷர்ட் அணிந்திருந்த பெண் தள்ளாடியபடி இருந்துள்ளார். அவரை உடன் வந்த இளம்பெண் கை தாங்கலாக பிடித்துக்கொண்டார். பஸ் நிலைய பிளாட்பாரத்தில் ஏறியபோது தள்ளாடியபடி வந்த இளம்பெண் தவறி கீழே விழுந்துவிட்டார்.. இதை பார்த்ததும் பயணிகள் சிலர் ஓடிச் சென்று அந்த பெண்ணை தூக்கிவிட முயன்றனர். அப்போது தான், கீழே விழுந்த இளம்பெண், மது போதையில் நிதானமின்றி இருந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. போதையில் உளறிய இளம்பெண், கண்டபடி தோழியை திட்டியபடி சென்றார். மதுபோதையில் நிதானத்தை இழந்த பெண் ஆடை கலைந்து அசிங்கமாக சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடன் வந்த இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர், வள்ளியூர் செல்கிறாம் என்றும், இவளுக்கு யாரோ மது வாங்கி குடிக்க வைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதனிடையே 2 இளம்பெண்களும் நேற்று முன்தினம் இரவில் வாலிபர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரி விடுதி ஒன்றில் மதுவிருந்து நடத்தியதாகவும், அங்கு வைத்து மதுக்குடித்த இளம்பெண் மட்டையாகிவிட்டதாகவும், காலை எழுந்த போதும் அவருக்கு போதை சரிவர தெளியாமல் சுற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications