கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் தம்மை பற்றி கற்பனைக்கு எட்டாத செய்திகள் வருவது வாடிக்கையாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் குஷ்பு போட்டியிடக்கூடும் என வெளிவரும் தகவல் பற்றி விளக்கம் அறிய ஒன் இந்தியா தமிழ் குஷ்புவை தொடர்புகொண்டு பேசியது.
அப்போது நம்மிடம் அவர் கூறியதாவது;

எனக்குத் தெரியாது
'' நீங்கள் சொல்வது எனக்கே புதிதாக இருக்கிறது. கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியில் நான் இறங்கவேயில்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை என்னிடம் இல்லை. அப்படியிருக்கும் போது இதற்கு என்ன பதில் சொல்ல முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் குஷ்பு அந்த தொகுதியில் சீட் கேட்கிறார் இந்த தொகுதியில் சீட் கேட்கிறார் என வதந்திகள் பரப்பப்படும். இதனால் இது போன்ற வதந்திகள் எனக்கு புதிதல்ல. அரசியலுக்கு வந்தது முதல் இதை பார்த்து வருகிறேன்.''

கட்சியின் முடிவு
''கன்னியாகுமரி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு தெரியும். கட்சி முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. குஷ்பு சீட் கேட்டார் கட்சி கொடுக்க மறுத்ததால் வருத்தத்தில் இருக்கிறார் என வழக்கம்போல் இப்போதும் செய்திகள் உலவவிடப்படும். என்னை பொறுத்தவரை நான் வதந்திகளை காது கொடுத்து கேட்பதில்லை''.

தலைமை முடிவு
''நிச்சயம் வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளருக்கு கன்னியாகுமரி தொகுதியில் தலைமை சீட் கொடுக்கும். கட்சித் தலைமை யாரை நிறுத்தப் போகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்று செயல்படுவேன். மற்றப்படி இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை'' எனத் தெரிவிக்கிறார் குஷ்பு.

குஷ்பு ட்வீட்
ஈ.வி.கே.எஸ். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த போது அவரால் அழைத்து வரப்பட்டு காங்கிரஸில் இணைந்தவர் குஷ்பு. தற்போது கட்சியில் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் தமக்கு முறைப்படி தெரிவிக்கப்படுவதில்லை என்ற அதிருப்தியை அண்மையில் ட்வீட்டர் முலம் அவர் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications