11 வருஷமாக செம ஜாலியாக இருந்த சுதா.. ஆனால் போலீஸ் பிடியில் சிக்கியபோது...!

கணவனை கொன்ற மனைவி 11 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

குமரி: மிக மிக கொடூரமான முறையில், நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவிற்கு ஒரு கொலையை செய்துவிட்டு, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி வந்த ஒரு பெண் 11 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

தக்கலை பேராணிவிளையை சேர்ந்த தம்பதி ராஜசேகர் - சுதா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். ராஜசேகர் ஒரு கொத்தனார். ஆனால் கடந்த 2007ல் இருந்து இவரை காணவில்லை என்று சுதாவின் சகோதரர் ரவி தக்கலை போலீசில் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தார். அதன்பேரில் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். ஆனால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இப்படியே 10 வருஷம் ஓடிப்போயாச்சு. ஆனால் சுதா மட்டும் ரொம்ப ஜாலியாகவே இருந்தார்.

மச்சான் மீது ஆசை

மச்சான் மீது ஆசை

புருஷனை காணோமே என்ற கவலைகூட அவருக்கு இல்லை. இதுதான் ரவிக்கு சந்தேகத்தை கொடுத்தது. அதனால் சுதாவிடமே வந்து நேரிடையாகவே, "உன் புருஷன் எங்கே?" என்று கேட்டுவிட்டார். அதற்கு சுதா பதிலே சொல்லவில்லை, ரவி கேட்டதையும் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை. ஆனாலும் ரவிக்கு மனசே ஆறவில்லை. ஏனென்றால் தன் சகோதரியைவிட மச்சான் ராஜசேகரை இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அதனால் சுதாவை இதுபற்றி கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.

மிரட்டல் போன்

மிரட்டல் போன்

அந்த நேரத்தில்தான் ஒரு போன் ரவிக்கு வந்தது. அதில், "சும்மா ராஜசேகரை பத்தி சுதாகிட்ட கேட்டு தொந்தரவு பண்ணிட்டே இருந்தால், உன்னை தீர்த்து கட்டிடுவோம்" என்று மிரட்டல் குரல் வந்தது. இதை பற்றி ரவி போலீசில் புகார் அளித்தார். 10 வருடங்களாக திணறிய போலீசார் இந்த துப்பை வைத்துக் கொண்டு ராஜசேகர் விவகாரத்தை மீண்டும் விசாரணையில் இறங்கினர்.

நண்பர்கள்

நண்பர்கள்

கடந்த பிப்ரவரி 17ம் தேதி ராஜசேகரின் வீட்டின் செப்டிக் டேங்க்கில் எலும்பு கூடுகளை மீட்டனர். அதனை தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பார்த்ததில் அந்த எலும்புக்கூடுகள் ராஜசேகர் உடையது என தெரியவந்தது. அப்போதுதான் சுதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பித்தனர். ஒவ்வொன்றாக விஷயம் வெளியே வந்தது.ஆல்வின், ஷிபு ஆகியோர் ராஜசேகரின் நண்பர்கள். இருவரும் அடிக்கடி வீட்டுக்கு வரும்போது ஆல்வினுடன் சுதாவுக்கு கள்ளக்காதல் பத்திக்கிச்சு.

கண்டித்த ராஜசேகர்

கண்டித்த ராஜசேகர்

இந்நிலையில் ஆல்வின் வெளிநாடு சென்றார். என்றாலும் அவருக்கு வீட்டில் பெண்பார்க்க தொடங்கினார்கள். அதனால் ஆத்திரமடைந்த சுதா, என்னால் ஆல்வினை விட்டு இருக்க முடியாது என்று ஷிபுவிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதற்கு ஷிபு, பேசாமல் மாத்திரை கொடுத்து உன் புருஷனை கொன்னுடு என்றார். அதன்படி அதற்கான நேரத்திற்கு சுதா காத்திருந்தார். ஆனால் சும்மா இல்லையே.. அதற்குள் ஷிபுவுடன் கள்ளக்காதல் பத்திக்கிச்சு. இதை ராஜசேகர் நேரில் பார்த்து கண்டிக்கவும் செய்திருக்கிறார்.

கொடூர கொலை

கொடூர கொலை

இதுதான் வினையே. இப்போது கொலை திட்டம் வேகவேகமாக நடந்தது. மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்திருக்கிறார் சுதா. அதை குடித்த ராஜசேகர் மயங்கி விழுந்திருக்கிறார். அந்த நேரத்தில் கரண்ட் ஷாக் கொடுத்து கொடுத்து கொல்ல முயன்றார். ஆனால் ராஜசேகர் சாகவில்லை. பிறகு தலையணையால் முகத்தை அமுக்கினோம்... உயிர் போகவில்லை. அதனால் அரிவாளை எடுத்து வெட்டினோம். உயிர் பிரிந்தது. உடலை வீட்டு செப்டிக் டேங்க்கில் போட்டோம்." என்று சொல்லி முடித்தார். ஷிபுக்கு போலீஸ் வலை விரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+