• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"எய்ட்ஸ் இருக்கு".. காதலன் ஒரு மாதிரின்னா.. காதலி வேற லெவல்.. வெலவெலத்த போலீசார்!

|

கன்னியாகுமரி: காதலன் ஒரு பதிலை சொல்லி போலீசாரை அசர வைத்தால், அதற்கு மேல் காதலி வேறு ஒரு பதிலை சொல்லி கன்னியாகுமரி மாவட்டத்தையே வெலவெலக்க செய்து விட்டார்.

  வெலவெலக்க வைக்கும் இளம்பெண்-ஆட்டோ டிரைவரின் காதல் | Oneindia Tamil

  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயசுதான் ஆகிறது.. நாகர்கோவிலில் உள்ள காலேஜில் முதல் வருஷம் படித்து வருகிறார்...

  இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென காணாமல் போய்விட்டார். வயசு பெண்ணை காணோம் என்றதுமே வீட்டில் பதறி போய்விட்டனர்... பல இடங்களில் மகளை தேடினர்.. கிடைக்கவில்லை..

  விசாரணை

  விசாரணை

  அதனால், பெற்றோர் போலீசில் புகாரை தரவும், போலீசாரும் அதன்பேரில் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், அந்த பெண் ஒரு இளைஞரை காதலித்து வந்தது தெரியவந்தது. அந்த இளைஞருக்கு வயசு 22 ஆகிறதாம்.. அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுபவராம்.. இவர்களுடைய காதல் அந்த பகுதியில் எல்லாருக்குமே தெரிந்துள்ளது.. இதையடுத்து, 2 பேரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.. பிறகு,இதனால் அவர்களை தேடும் பணி ஆரம்பமானது.

  பெண்

  பெண்

  இறுதியில் கோவையில் இருப்பதாக தகவல் தெரியவும், போலீசார் விரைந்து வந்து அவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர்.. விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் போலீசார் அதிர்ந்தனர்.. அந்த ஆட்டோ டிரைவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சொன்னார்.. உடனே போலீசார், உனக்கு தான் நோய் இருக்குன்னு தெரியுமில்லே, அப்பறம் ஏன் இந்த பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்தாய்? என்று கேட்டனர்..

   எய்ட்ஸ்

  எய்ட்ஸ்

  ஆனால், இதற்கு சிறுமி குறுக்கே புகுந்து பதில் தர முயன்றார்.. அந்த பதிலை கேட்டு, போலீசார் மட்டுமல்ல அந்த பெண்ணின் பெற்றோர் உட்பட மொத்த பேருமே ஆடிப்போய்விட்டனர். "அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும்.. சொல்லி இருக்கார்.. பார்க்க பாவமாய் இருந்தது.. பரிதாபப்பட்டுதான் இரக்கத்தினால்தான் அவரை காதலித்தேன்" என்றார்..

  சிகிச்சை

  சிகிச்சை

  இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல், சற்று நேரம் விழித்த போலீசார், இந்த பெண்ணுக்கு 17 வயசுதான் ஆகிறது என்பதால், இளைஞரை போக்சோவில் கைது செய்தனர்.. பிறகு 2 பேரும் கோவையில் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.. அதனால், மாணவியை மெடிக்கல் செக்கப்புக்கும் சிகிச்சைக்கும் அனுப்பியுள்ளனர். 2 நாட்களாக இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  காதல்

  காதல்

  எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துவந்தாலும், அந்த நோய்க்கு இன்னும் மருந்து இல்லை.. குணப்படுத்தவும் முடியாத நிலை உள்ளது.. அதுமட்டுமல்ல 22 வயசிலேயே அந்த இளைஞனுக்கு நோய் வந்திருக்கிறது என்றால், எத்தனை வயசில் ஒழுக்கம் தவறி இருப்பார் என்று தெரியவில்லை.. மேலும் பரிதாபப்பட்டு காதலித்தேன் என்று சிறுமி சொல்வதை எப்படி எடுத்து கொள்வது? காதலின் ஆழமா? அல்லது அறியாமையின் உச்சக்கட்டமா? தெரியவில்லை.. ஆனால், அந்த இளைஞன்தான் முழு முதல் குற்றவாளி..!

   
   
   
  English summary
  AIIDS patient Cheating young girl near Kanniyakumri
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X