கேரளா முழு அடைப்பு: களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பொதுமக்கள் பாதிப்பு
Recommended Video

கன்னியாகுமரி:கேரளா முழு அடைப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்களான கிருபேஷ்,சரத்லால் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி அங்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையத்தோடு நிறுத்த பட்டது.
கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப் படுகின்றன ஆனாலும் காசர்கோடு உட்பட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பேருந்துகள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு நிலவியது.

போராட்டம் காரணமாக பொது மக்கள் இயல்பு வாழ்க்கை ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மட்டுமின்றி மருத்துவமனைக்கு செல்வோரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications