Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவின் கையில் அந்த 'ரகசிய ரிப்போர்ட்'.. டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. ஒரே மேடையில் மொத்த கூட்டணியும்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பாரதீய ஜனதா கட்சியின் மேலிடத் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வருகை தருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அந்தவகையில் இன்றைய தினமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளனர்..

வரப்போகும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் பிரசாரக் கூட்டங்களில் தீவிரமாக இறங்கியுள்ளன.

Amit Shah BJP TN Politics

இந்த தேர்தல் களத்தின் அடுத்தக்கட்ட நிகழ்வாக, விரைவில் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரப்போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..

பிரம்மாண்ட மகளிர் மாநாடு

கன்னியாகுமரியில் நடைபெறும் பிரம்மாண்டமான மகளிர் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த பலத்தையும் பறைசாற்றும் வகையில் அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி வருகை அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவின் ரிப்போர்ட்

பிரதமரின் வருகையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வர உள்ளார்.. அதிமுக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த கூட்டணியில், தொகுதிப் பங்கீடு மற்றும் அடுத்தகட்ட தேர்தல் வியூகங்கள் குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனைகளை வழங்கப்போவதாக தெரிகிறது.. இதற்கான முக்கிய ரிப்போர்ட் அமித்ஷாவிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமித் ஷா பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் மிக நெருக்கமான ஆலோசனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் அரசியல் சூழல் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் நடத்தவுள்ள சந்திப்புகள், கட்சிகளுக்கிடையே நிலவும் உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணி

இந்தத் தேர்தலில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைப்பதோடு, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தமிழகத்தைச் சென்றடைந்த விதம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் தங்களுக்கு இருக்கும் அக்கறை ஆகியவற்றை முதன்மைப் பிரச்சார கருப்பொருளாக மாற்ற என்டிஏ கூட்டணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன..

அதேபோல வாக்காளர்களைக் கவரும் புதிய உத்திகள் மற்றும் தேர்தல் களப்பணிகளை ஒருங்கிணைக்கும் முறைகள் குறித்து இந்தச் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது..

ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள்

தேர்தலுக்கு மிகக்குறைந்த நாட்களே உள்ள நிலையில், அமித் ஷாவின் இந்தத் தீவிரமான பயணமும் ஆலோசனைகளும் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கு வித்திடுவதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் ஒரு திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், டெல்லி தலைவர்களின் இந்த தொடர் வருகையானது, தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், கூட்டணிக்குள் இருக்கும் சிறிய மற்றும் பெரிய கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும் பெரிதும் உதவலாம், தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கும் மிகப்பெரிய பலமாக அமையும்.

தேசியத் தலைவர்கள் நேரடியாகக் களமிறங்கும்போது, அது அடிமட்டத் தொண்டர்கள் வரை ஒருவித உத்வேகத்தைக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+