Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.1000.. தமிழக அரசு இளைஞர்களுக்கு தரும் திட்டம் தெரியுமா? கன்னியாகுமரி கலெக்டர் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-1-2026 முதல் 31-3-2026-ந் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 31-12-2025 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

Are you aware of the Tamil Nadu government s scheme to provide Rs 1000 per month to yourth

31-3-2026 அன்று உச்சவயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்பஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து 31-12-2025 தேதியில் ஒருவருடம் முடிவுற்றிருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

பொதுப்பிரிவு பதிவுதாரர்களைப் பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம். பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது. உதவித்தொகை வழங்கப்படும் காலத்திலும் பதிவுதாரர்களது கல்வித்தகுதி, வயது மற்றும் பதிவுமூப்புக்கு உட்பட்டு அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தொடர்ந்து அரசின் விதிமுறைப்படி பரிந்துரைக்கு பரிசீலிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெறவேண்டுமானால் (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெறவேண்டுமானால்) சுயஉறுதிமொழி ஆவணத்தை ஒவ்வொரு வருடமும் அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+