அமைச்சர் மனோ தங்கராஜ் Vs நாம் தமிழர் கட்சி நிர்வாகி! கிராமசபை கூட்டத்தில் நடந்த டிஸ்யூம் டிஸ்யூம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கும் இடையே ஒன் டூ ஒன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கிராம சபைக் கூட்டத்திலிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

உழைப்பாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களிலும் வாக்குவாதங்கள், பஞ்சாயத்துக்கள் என பாதியிலேயே அமளி துமளியோடு கிராம சபைக் கூட்டங்கள் முடிந்தன.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.
அப்போது அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலன், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கு கனிம வளக் கொள்ளை குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அருவிக்கரை ஊராட்சியை சேர்ந்த மக்கள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்றும் அருவிக்கரை பஞ்சாயத்து தொடர்பான பணிகள் பற்றி மட்டும் கேட்கலாம் எனத் தெரிவித்தனர்.

ஆனாலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலன் கனிமவளக் கொள்ளை பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் மனோதங்கராஜ் சூடாக பதில் சொன்னார். இதனிடையே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலனை கிராம சபைக் கூட்டம் நடைபெற்ற பகுதியிலிருந்து காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் குறிப்பிட வேண்டிய கூடுதல் தகவல் என்னவென்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, பத்மநாபபுரம் தொகுதியில் அமைச்சர் மனோதங்கராஜை எதிர்த்து நேற்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் நிர்வாகி சீலன் போட்டியிட்டார் என்பது தான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications