என்ன தைரியம்.. கன்னியாகுமரியில் ஏடிஎம்க்கு போன இளைஞர்.. கடைசியில் கவனமாக பாருங்க!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் இரவு வேளையில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Recommended Video

    பணம் வரவில்லை.. ஏடிஎம் உடன் சண்டை போட்ட கொள்ளையன் - வீடியோ

    வங்கி ஏடிஎம்களை உடைத்து பணத்தை திருடுவதற்கு பல கொள்ளையர்கள் முயற்சி வசமாக மாட்டி உள்ளார்கள். பெரும்பாலன முயற்சிகள் கைகூடுவது இல்லை. ஏனெனில ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடிப்பது என்பது எளிதானது அல்ல.

    சிசிடிவி காட்சிகள், காவல் நிலையத்துடன் தொடர்பு, அபாய அலாரம் என எல்லாம் இருக்கிறது. ஆனால் அதையும் மீறித்தான் கொள்ளையர்கள் திருட முயற்சிக்கிறார்கள்.

    ஏடிஎம் மையம்

    ஏடிஎம் மையம்

    கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராம பகுதியான சின்னத்துறை சந்திப்பு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கி செயல்பட்டு வருகிறது இந்த வங்கிக்கு கீழ் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது.

    ஏடிஎம் உடைப்பு

    ஏடிஎம் உடைப்பு

    இந்த மையத்தில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்று இயந்திரத்தை சேதப்படுத்தி சென்றுள்ளார்.இன்று காலை வழக்கம் போல் வங்கி மேலாளர் வங்கிக்கு வரும்போது ஏடிஎம் உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பணத்தை திருட முயற்சி

    பணத்தை திருட முயற்சி

    வங்கியினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துவிட்டு பணம் ஏதும் கிடைக்காததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை காலால் உதைத்து விட்டு வெளியே செல்வது பதிவாகி இருந்தது.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதனை தொடர்ந்து வங்கி மேலாளர் நிஷா நித்திரவிளை போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் சம்பவ இடம் சென்ற நித்திரவிளை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை திருட முயன்று சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+