குமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு!
குமரியில் எச்.ராஜாவுக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன
Recommended Video
சென்னை: கோர்ட் உத்தரவுக்கும்.. எச்.ராஜாவுக்கும் ரொம்ப தூரம் போல தெரிகிறது.. கன்னியாகுமரி முழுக்க எச்.ராஜா உருவம் பொறித்த பேனர்கள் பறக்கிறது!
பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ மரணம் இன்னும் நம்மை விட்டு மறையவே இல்லை. மேலும், பேனர்கள் வைக்க கூடாது என்று தொண்டர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சாட்டையை எடுத்து சுழட்டியது ஐகோர்ட்!

இதையடுத்து ஒவ்வொரு கட்சி தலைவர்களும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி சார்பில் உத்தரவு போட்டனர். அதேபோல, நடிகர்களும் தங்களுக்கு யாரும் பேனர்களை வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் மட்டும் எச்.ராஜாவின் பேனர்கள் வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் பகுதியில் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் போலும். இந்த நிகழ்ச்சியில்தான் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். இதற்காகத்தான் ரோடெல்லாம் நிறைய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பிரம்மாண்டமான பேனர்கள்தான்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி, இதற்கெல்லாம் கலெக்டர் அனுமதி தந்தாரா அல்லது இப்படி பேனர் வைத்து கொள்ள, போலீசிடம் அனுமதியாவது வாங்கப்பட்டதா என்றும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஏற்கனவே ஊரெல்லாம் வைக்கப்பட்ட பேனர்களை பல தரப்பினர் அகற்றி வரும் நிலையில், புதிதாக எச்.ராஜாவுக்கு பேனர்களை வைத்துள்ள சம்பவமும், பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.
ஏற்கனவே கோர்ட்டாவது.. "டேஷ்"ஷாவது.. என்று நீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்திருந்த நிலையில், திரும்பவும் ஒரு நீதிமன்ற அவமதிப்பா என்று மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications