பாஜக கொடியை மட்டுமல்ல.. தலையை நீட்டினாலும் துண்டிப்போம்.. கொலை மிரட்டல் விடுத்த திமுக மேயர்
கன்னியாகுமரி: பாஜகவினர் தலை துண்டிக்கப்படும் என நாகர்கோவிலில் மேயர் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேயர் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகர திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான மகேஷ் பங்கேற்றார்.
அப்போது அவர் நான் கவுன்சிலராக இருக்கும் 4ஆவது வார்டில் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

பார்வதிபுரம்
இதற்காக கட்சி தொண்டர்கள் பார்வதிபுரம் பகுதியில் திமுக கொடிகளை கட்டி வைத்திருந்தனர். ஆனால் திமுக கொடிகளின் இடையே பாஜக கொடியை கட்டி வைத்திருந்தனர். பாஜக கொடிகளை இரவோடு இரவாக எங்கள் தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்கள். பாஜக கட்சியை சேர்ந்தவர்களே அன்று உங்கள் தலைவர்கள் யாராவது வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் யாருமே வரவில்லை.

கவுன்சிலர்
அப்படியிருக்கும் போது பிரச்சினையை கிளப்புவதற்காகவே நீங்கள் கட்டியிருந்த கொடிகளை எங்கள் தொண்டர்கள் அப்புறப்படுத்தினார்கள். நான் கவுன்சிலராகவும் மேயராகவும் மாவட்டச் செயலாளராகவும் உள்ள இடத்தில் ஊறுவிளைவிக்க பாஜகவினர் ஈடுபட்டால் அவர்கள் கொடிகளை மட்டுமல்ல அவர்கள் தலையை நீட்டினால் தலையும் துண்டாக்கப்படும் என தெரிவித்தார்.

கை மூலம் கொலை மிரட்டல் சைகை
அப்போது அவர் கழுத்தில் கையை வைத்து சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். என் மீது வழக்கு வந்தாலும் பரவாயில்லை. அதை சந்திக்க நான் தயார். தலைவர் ஸ்டாலினின் ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்பதற்காக பொறுத்து போகிறோம். பாஜக இந்த மாவட்டத்தில் மத கலவரத்தை உருவாக்கி மாற்றத்தை கொண்டு வரலாம் ன நினைத்தால் அது நடக்காது. எங்கள் மீது உங்கள் கைவிரல்கள் நீட்டப்பட்டாலே துண்டிக்கப்படுவீர்கள் என ஆவேசமாக பேசினார்.

வீடியோ
இவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவரது பேச்சை கண்டித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி தலைமையிலான பாஜகவினர் புகார் அளித்தனர். கோட்டார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications