Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”என்ன சட்டை, என்ன பனியன் அணிகிறார்” இதை பார்ப்பதுதான் பாஜகவின் அரசியலா? கொதிக்கும் திருநாவுக்கரசர்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ ஷர்ட் குறித்து விமர்சிப்பது பாஜகவின் மலிவான அரசியல் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யும் விதத்திலும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கி உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் 3,500க்கும் மேற்பட்ட கிமீ தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் 4வது நாளாக நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இதனிடையே நேற்று ராகுல் காந்தி அணிருந்திருந்த டீ ஷர்ட் குறித்து பாஜக விமர்சித்திருந்தது. பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டீ-ஷர்ட்டின் விலை ரூ.41,257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு பாரதம் பார்க்கட்டும் என்ற வார்த்தையையும் பாஜக பதிவிட்டது.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பதிலடி

இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில், பிரதமர் மோடி ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோர்ட் அணிந்து இருந்தார். பாரத் ஜோடா யாத்திரையில் திரளும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டீர்களா? பிரச்சினைகளை பற்றி பேசுங்கள்.. வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள். ஆடைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி 10 கோடி மதிப்புள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் பதிப்புள்ள கண்ணாடி அணிந்து இருந்தது பற்றியும் பேசப்படும் என்று பதிலடி கொடுக்கப்பட்டது.

திருநாவுக்கரசர் பேட்டி

திருநாவுக்கரசர் பேட்டி

இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்துள்ள காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறுகையில், மகாத்மா காந்தியின் இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்று கொடுத்தது. அதேபோல் ராகுல் காந்தியின் நடைபயணம் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை, அரசியல் புரட்சியை ஏற்படுத்தும். துணிச்சலோடும், தைரியத்தோடும் பாஜக எதிர்க்கக் கூடிய ஆற்றமிக்க தலைவராக ராகுல் காந்தி திகழ்கிறார். பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் தான். மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான்.

அதனை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை ஆசியையும் வாழ்த்துகளையும் ராகுல் காந்திக்கு கூறுகிறார்கள். இந்தியா முழுவதும் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

இதுவா பாஜகவின் வேலை?

இதுவா பாஜகவின் வேலை?

தொடர்ந்து ராகுல் காந்தியின் டீ ஷர்ட் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், அப்படியென்றால் மோடி அணியின் ஆடைகள் ரூ.10 லட்சம் என்று கூறுகிறார்கள். ஒருநாளுக்கு ரூ.5 லட்சம் ஆடைகளுக்கு மட்டும் செலவிடப்படுவதாக கூறுகிறார்கள். ராகுல் காந்தி என்ன சட்டை அணிகிறார், என்ன பனியன் அணிகிறார், அதன் விலை என்ன என்பதை கணக்கிடுவதா எதிர்க்கட்சியின் வேலை.

மலிவான அரசியல்

மலிவான அரசியல்

அவரின் நடைபயணத்தில் உள்ள குறைகளை விமர்சிக்கலாம். அதைவிடுத்து ஆடைகளை பற்றி விமர்சிப்பது தானா நாட்டில் உள்ள பிரச்சனை. இந்த மாதிரி அரசியல் செய்வது கேவலமாக இல்லையா? இது அனைத்தும் மலிவான அரசியல். அவர் என்ன தங்கத்திலா பனியன் அணிந்துள்ளார் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+