கன்னியாகுமரியில் கல்யாணமான 2 நாளில்.. சென்னையில் கல்யாணமான அன்றே.. கணவன்களுக்கு ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் செல்வன்புதூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தென்காசி பகுதியை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த 29ம் தேதி திருமணம் நடந்தது.. இருவரும் 2 நாட்கள் கணவன், மனைவியாக சந்தோசமாக இருந்தார்களாம்.. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்து தேவி வெளியேறிய நிலையில், திரும்பவரவில்லை. இதனால் ஆடிப்போன கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்றைக்கு காதல் என்பது பொதுவாகிவிட்டது. பலரும் காதலிக்கிறார்கள். ஆனால் 90 சதவீத காதல் திருமணத்தில் முடிவது இல்லை.. சிலர் திருமணம் நடைபெறுவதற்கு முன்பே முன்பே காதலனுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். சில பெண்கள் திருமணத்திற்கு பிறகு காதலனுடன் சேர்ந்து வாழ போய்விடுகிறார்கள். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்யும் சிலர், காதலன் வந்து கூப்பிட்ட உடன் அவருடனே சென்றுவிடுகிறார்கள். கன்னியாகுமரி அருகே கல்யாணம் நடந்த இரண்டு நாளில் புதுப்பெண் மாயமாகியுள்ளார். என்ன நடந்தது, யாரையும் காதலித்தாரா அல்லது வேறு எதுவும் பிரச்சனையா என்பது தெரியவில்லை..

கன்னியாகுமரி திருமணம்
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் செல்வன்புதூரைச் சேர்ந்த 31 வயதாகும் கண்ணன் என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தென்காசி பகுதியை சேர்ந்த 25 வயதாகும் தேவி என்பவருக்கும் கடந்த 29-ந் தேதி செல்வன்புதூரில் திருமணம் நடந்தது. இருவரும் 2 நாட்கள் கணவன், மனைவியாக சந்தோசமாக இருந்தார்களாம்,
கன்னியாகுமரியில் மனைவி மாயம்
இந்தநிலையில் கடந்த ஜூலை 1-ந் தேதி காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளாராம். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் தேவி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இனஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணமான 2 நாளில் புதுப்பெண் மாயமான சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் பெண் மாயம்
சென்னையில் திருமணமான அன்றே வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும், மாதவரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 2 ம் தேதி காலை பெசன்ட் நகர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் இரு வீட்டு உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்து மணமக்கள் இருவரையும் பெண் வீட்டுக்கு அழைத்து வந்தனர். மாலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
காதலனுடன் ஓட்டம்
இந்தநிலையில் புதுப்பெண், வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது வரவேற்பு நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கியதால் பதற்றம் அடைந்த பெற்றோர், தங்கள் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.அதன்பிறகு பெற்றோர் விசாரித்துள்ளர்கள். புதுப்பெண் ஏற்கனவே காதலித்து வந்த மற்றொரு இளைருடன் எஸ்கேப் ஆனது தெரிந்தது.
மணமகள் ஓட்டம்
திருமணமான அன்றே மணமகள், தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த தகவல் அறிந்து, மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மாலையில் நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நின்றது. தங்கள் மகளை மீட்டு தருமாறு பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications