கன்னியாகுமரியில் உறவுக்கார பையனுக்கு வீட்டிற்குள் பாடம் நடத்திய ஆசிரியை.. அந்த நேரத்தில் வந்த கணவன்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திருமணத்தை மீறிய காதல் உறவு குடும்பங்களை மொத்தமாக சீர்குலைத்துவிடுகிறது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய சிறிய மனஸ்தாபங்கள் சரி செய்யாமல் போகும் போது, கள்ளக்காதல் ஏற்படுகிறது. அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆசிரியை, கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கள்ளக்காதலனுடன் செல்வதாக கூறி அடம் பிடித்திருக்கிறார்.

கள்ளக்காதல் உண்மையில் இந்த வார்த்தை சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல குடும்பங்களில் விவாகரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் கணவன் அல்லது மனைவி, குழந்தை, பெற்றோருக்கு பயந்து மறைமுகமாக தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவரும் போது ஊரை விட்டு வெளியேறுவது அல்லது எதிர்க்கும் கணவன் அல்லது மனைவியை போட்டுத்தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

kanyakumari teacher

இன்னும் சிலர் கள்ளக்காதலை கைவிடவும் முடியாமல், உண்மை வெளியே தெரிந்த காரணத்தால், அவமானம் என்று கருதி உயிரை மாய்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். அதேநேரம் சிலர் கணவனை எதிர்த்து, சமூகத்தை எதிர்த்து கள்ளக்காதலனுடன் வாழ்கிறார்கள். இதில் என்ன ஒரு சிக்கல் என்னவென்றால், திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்கப்படுவது இல்லை.. அப்படி தண்டிக்க வழிகளும் இல்லை.. எனவே பெரும்பாலும் இதுபோன்ற பஞ்சாயத்துக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து மூலமே தீர்க்கப்படுகின்றன. காவல் நிலையங்களில் பேசி சமாதானமாக சென்றாலும் இந்த பிரச்சனைக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதே ஒரே தீர்வாக உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை பற்றி பார்ப்போம்.. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் மீனாவிற்கு திருமணம் ஆகி கணவரும் 2 குழந்தைகள் உள்ளனர். ஆசிரியை மீனாவின் வீட்டுக்கு அவர்களது உறவுக்கார இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அப்படி வந்துபோன பழக்கத்தில் அந்த இளைஞருக்கும், ஆசிரியைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.திருமணத்தை மீறிய இந்த உறவு ஆசிரியைக்கு மிகவும் பிடித்துப்போக, அதனை தொடர்ந்தார். அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் அரசல் புரசலாக ஆசிரியை மீனாவின் கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. அதன்பிறகு தான் ட்விஸ்ட் நடந்துள்ளது. தைரியமாக அடிக்கடி உறவுக்கார வாலிபரை மீனா சந்தித்து பேசி வந்திருக்கிறார். அப்படித்தான் சம்பவத்தன்று ஆசிரியையின் கணவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்குள் பார்த்தபோது மனைவியும் அந்த இளைஞரும் வீட்டில் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

கணவரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதையடுத்து மனைவியை கணவர் கடுமையாக கண்டித்ததுடன், தாக்கினாராம். இதில் ஆசிரியையின் காதில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த விவகாரம் தொடர்பாக மறுநாளும் கணவர், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் மீண்டும் கணவர் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் மீண்டும் ஆசிரியையை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வெளியே சென்று இருந்த ஆசிரியையின் கணவர் வீட்டிற்கு உடனே வந்தார். மனைவி வாலிபருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து இளைஞரையும் கடுமையாக தாக்கினார்.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியை மற்றும் அவரது கணவர், கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். அப்போது ஆசிரியை கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். போலீசார் பல முறை பேசி அவரை சமாதானம் செய்தனர். எனினும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

கணவர் தனக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் இனி அவருடன் வாழ முடியாது கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அடம் பிடித்தார். கடைசியில் ஒரு வழியாக போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக சமாதானம் செய்து கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+