டான்ஸரும் கர்ப்பம், மனைவியும் கர்ப்பம்.. கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்து வந்து ஏமாற்றிய என்ஜினியர்
கன்னியாகுமரி: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். போலீசாரும் எவ்வளவுதான் விழிப்பாக இருந்து சட்டம் - ஒழுங்கை கடைப்பிடித்து வந்தாலும், குற்ற சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளது.. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது செங்கோடு புல்லன்விளை என்ற பகுதி.. இங்கு குடும்பத்துடன் வசித்து வருபவர் சதீஷ்குமார்... இவரது செல்ல மகன் அபிஷ்.. 30 வயதாகிறது...

மகனை இன்ஜினியருக்கு படிக்க வைத்தார் சதீஷ்குமார்.. அதன்படியே சதீஷ் படித்து முடித்ததுமே துபாயில் வேலைக்கும் சென்று விட்டார்.. சில வருடங்கள் அங்கு வேலை பார்த்து வந்த நிலையில், சமீபத்தில்தான் சொந்த ஊருக்கு வந்தார்.. வேறு எந்த வேலைக்கும் இன்னும் செல்லவில்லை..
கன்னியாகுமரி என்ஜினியர்
தற்போதும் சொந்த ஊரில்தான் இருந்து வருகிறார். அபிஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.. அவரது மனைவி இப்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில், அபிஷுக்கும் புதுச்சேரியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பெண் ஒரு நடன கலைஞர் ஆவார்..
அந்த பெண்ணுடன் பழக ஆரம்பித்ததில் இருந்தே, தன்னை பற்றின விவரங்களை மறைத்து விட்டார் அபிஷ்... குறிப்பபாக தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்வதாக அபிஷ் அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தைகள் கூறி நம்பிக்கை அளித்துள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் கர்ப்பம்
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அபிஷ் அந்த நடன கலைஞரை புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவழைத்துள்ளார்... திற்பரப்பு அருவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று, உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில்தான் அபிஷ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை சொல்லி, அப்பெண்ணை நம்ப வைத்தாராம்.. பிறகு அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதன் விளைவாக அந்த பெண் 4 மாத கர்ப்பமடைந்துள்ளார்.
இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு அபிஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அபிஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஆனால், அபிஷ் இதனை மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியும் கர்ப்பம்
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்துவிட்டார்... அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமானதை மறைத்து, பெண் நடன கலைஞரை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இன்ஜினியரை போலீசார் கைது செய்த சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.... ஒரே சமயத்தில் காதலியும் கர்ப்பம், மனைவியும் கர்ப்பம் என்பதால் இந்த விவகாரத்தை மகளிர் போலீசார் இரு பெண்களின் நலனை கவனத்தில் கொண்டு மேற்கொண்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications