பிரபலம் யார்னு தெரியுதா.. கையில் மண்வெட்டி வேற.. தோட்டத்தில் குழியை வெட்டி அதுல.. வாவ் கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. பொதுமக்களுக்கு மிகச்சிறந்த விழிப்புணர்வாகவும் இந்த வீடியோ திகழ்ந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.
ஆலோசனை கூட்டம்: அப்போது அவர் பேசும்போது, "வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.. மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்..
வீடுகளில் சேரும் கழிவுநீரை, வீட்டுக்கு வெளியே விடும்போது நீர் நிலைகளில் கலந்து அவை மாசு ஆகின்றன.. எனவே, அதைப்போக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் உறிஞ்சுக் குழாய் அமைக்க வேண்டும்.. குப்பைகளை உரமாக மாற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டும். நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என்று அமைச்சர் கூறியிருந்தார்.
அதிரடி: ஒவ்வொரு வீடுகளிலும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியிருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.. அமைச்சர் இப்படி அறிவித்ததுடன் இல்லாமல், இதன் முன்னோடியாக தானே நேரடியாக களமிறங்கி, செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
கருங்கலில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்பு, கழிவு நீர் உறிஞ்சிக் குழாயை, மனோதங்கராஜ் தோண்டினார்.. இதற்காக வேறு யாரையும் பணியில் ஈடுபடுத்தவில்லை.. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் அவரே இந்தப் பணியில் ஈடுபட்டார்... பிளாக் & பிளாக் டிரஸ்ஸில், ஷாட்ஸ் அணிந்து, மண்வெட்டியை எடுத்து பள்ளங்களை தோண்டி, இந்த பணிகளை மேற்கொண்டார்.. இதுகுறித்த வீடியோதான், சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது.
கூடுதல் ஆர்வம்: மனோ தங்கராஜை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.. எனவே, இந்த பணிகளில் எல்லாம் சற்று கூடுதல் கவனம் செலுத்துபவரும்கூட.. இவரது முயற்சியால் குமரி மாவட்டத்தில், "குப்பை இல்லா குமரி" என்ற திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதாவது, குமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து வௌியேறும் கழிவு நீர்நிலைகளில் கலந்து தண்ணீர் மாசுபடுவதை தடுக்கவும், பிளாஸ்டிக் இல்லா குமரியை உருவாக்கவும் "குப்பை இல்லா குமரி" என்ற இயக்கம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி மனோ தங்கராஜ் களியக்காவிளையில் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் இது குறித்தான விழிப்புணர்வு ஓட்டத்தை களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடத்தியும் காட்டினார்.
மகிழ்ச்சி: இப்போது அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணியையும் துவக்கி உள்ளதால், கன்னியாகுமரியே மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications