கன்னியாகுமரிக்கு சர்ப்ரைஸ்.. மணக்க மணக்க தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியூடு.. ஸ்பெஷல் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.. எத்தனையோ மலர் மாலைகள் இருந்தாலும் தோவாளையின் மணக்கும் மாலைக்கு அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா? ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை தந்து, மாவட்டத்திற்கு நற்பெயரையும் தந்துள்ள தோவாளை மாணிக்க மாலையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

தமிழகத்திலுள்ள மலர் சந்தைகளிலேயே மிகவும் பிரபலமானது தோவாளை மலர் சந்தையாகும்.. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்படும் பூக்கள்தான், தமிழகம் மட்டுமல்லாமல், கேரள மாநிலத்துக்கும் டன் கணக்கில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Kanyakumari thovalai manikka garland

தோவாளை மலர் சந்தை

தோவாளை மலர் சந்தையில் மலர் மாலைகள் அதிகமாக விற்கப்படும்.. இந்த மலர்மலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.. அதேபோல, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்று பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனவே, தோவாளையில் பிரதான தொழில் பூ கட்டுவதாக உள்ளது. இந்த தொழிலை நம்பியே ஏராளமானோர் தலைமுறை தலைமுறையாக பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார்கள்.

மாணிக்கமாலை ஸ்பெஷாலிட்டி

இப்படி கட்டி விற்கப்படும் மாலைகளில், மாணிக்க மாலை பிரசித்தி பெற்றது.. அரளி பூ, ரோஜா பூ, நொச்சி இலைகளை கொண்டு இந்த மாணிக்க மாலை தயாரிக்கப்படுகிறதாம். அதாவது, அரளியில் வெள்ளை, சிவப்பு மலர்களும், ரோஜாவில் வெள்ளை, சிவப்பு மலர்களும் என அத்தனை வண்ணங்களும் ஒரே மாலையில் இடம்பெற்றிருக்கும். பார்ப்பதற்கு அச்சுஅசல் முத்து நகைகளை பதித்து வைத்ததுபோலவே காணப்படும்..

அதுமட்டுமல்ல, எந்தவிதமான செயற்கை பூச்சும் இல்லாமல், முழுக்க முழுக்க இயற்கை பூக்களாலே உருவாக்கப்படுவதால் 4 நாள் ஆனாலும், இந்த மாணிக்கமாலை ஃபிரஷ்ஷாக இருக்கும்.. அதனால்தான், சுவாமி அலங்காரம், சப்பர அலங்காரத்தில் மாணிக்கமாலை முக்கிய இடத்தை பெறுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு தோவாளையில் இருந்தே தினமும் மாணிக்கமாலை செல்கிறது.

அரசியல் கட்சி தலைவர்கள்

அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இந்த மாலையே சூட்டப்படுகின்றன.. அவ்வளவு ஏன்? சீன அதிபர் மாமல்லபுரம் வந்தபோது பிரதமர் விவரித்து கூறிய தமிழர் பண்பாடு கலைகளில் மாணிக்கமாலை இடம் பிடித்திருந்தது..

ஆனால், இதை மற்ற மாலைகளை போல எளிதில் கோர்த்துவிட முடியாது.. முழுகவனத்தையும் ஒருங்கே குவித்து, கலைநயத்துடன், அழகியலுடன், பொறுமையுடன் இந்த மாலையை கோர்க்க வேண்டுமாம். அந்தவகையில், வழக்கமான பூ கட்டுவதில் இருந்து மாறுபட்டு இது தையல் வடிவில் இருப்பதால், இந்த மாணிக்க மாலைகள், கைவினைக் கலைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கன்னியாகுமரி

மற்ற மாலைகளை உருவாக்குவதைவிட, மாணிக்க மாலையைக் கோப்பது சிரமம். மனதை ஒருநிலைப்படுத்தி கலை நுட்பமாக இதைத் தயார்செய்யவேண்டும். தோவாளையில் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு மட்டும்தான், சரியான கலை நுணுக்கத்தோடு, மடிப்புத்தன்மை மாறாமலும், பூக்கள் சேதமாகாமலும் கட்டும் நுட்பம் இருக்கிறதாம்.. எனவேதான், கைவினைக் கலைஞர்கள் இதற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படியே, தற்போது தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இது கன்னியாகுமரி மாவட்ட மக்களை மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+